இவ்வளவு மாத இடைவெளியால் பாதிக்கப்பட போக இருக்கும் வீரர்கள் இவர்கள்தான் – ஆஷிஷ் நெஹ்ரா கணிப்பு

Nehra
- Advertisement -

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த கொரோனா வைரசை தடுக்கவும் தவிர்க்கவும் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றுமின்றி அனைத்து தரப்பினரும் தங்களது இயல்பு வாழ்க்கை விடுத்து கடும் கட்டுப்பாடுகளுடன் வீட்டில் உள்ளனர்.

IND-2

- Advertisement -

தற்போது வரை இரண்டு வாரங்கள் ஆகியுள்ளது. இந்தியாவில் தற்போது இந்த கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கிரிக்கெட் போட்டிகள் உட்பட பல விளையாட்டுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மீண்டும் இந்த போட்டிகள் அனைத்தும் நடைபெற இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது.

இதனால் கிரிக்கெட் வீரர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். உடல் தகுதியுடன் இருக்க வீட்டிற்குள்ளேயே வீரர்கள் உடற்பயிற்சியும் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நீண்ட இடைவெளி பேட்ஸ்மேன்களை விட பந்து வீச்சாளர்களுக்கே மிகவும் ஆபத்தானது என இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :

Ind-2

இந்த சூழ்நிலை குறித்த ஒரு சின்ன உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். ஏப்ரல் 15ஆம் தேதி இந்த ஊரடங்கு முடிவுக்கு வருகிறது என்று எடுத்துக் கொண்டாலும் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்ப பல மாதங்கள் ஆகும். அதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவே சிறிது காலம் பிடிக்கும் அதன்பின்னரே மற்ற செயல்களில் ஈடுபட முடியும்.

- Advertisement -

என்னை கேட்டால் ஜூலை மாதத்திற்கு முன்னரே கிரிக்கெட் வீரர்கள் எப்படியாவது ஆடுகளத்திற்கு திரும்பிவிட வேண்டும். இந்த நீண்ட இடைவேளையின் பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார் ஆசிஸ் நெஹரா.

ஏனெனில் பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்கள் அதிக பயிற்சி தேவை மேலும் தொடர்ச்சியாக டச்சில் இருந்தால் மட்டுமே அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நெஹ்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement