- Advertisement -
ஐ.பி.எல்

520 கோடி இருந்தாலும் ஒன்னுமே பண்ண முடியாது.. பும்ராவுக்காக கண்டிப்பா சண்டை வரும் – ஆஷிஷ் நெஹ்ரா கருத்து

இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணங்களால் விலகியிருந்ததால் அவருக்கு பதிலாக பும்ரா கேப்டன்சி செய்து இந்திய அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி பெர்த் நகரில் நடைபெற்ற போட்டியில் அற்புதமான வெற்றியை தேடித்தந்தார்.

பும்ராவை யாராலும் வாங்க முடியாது :

ஒரு கேப்டனாகவும், ஒரு பந்துவீச்சாளராகவும் அவர் அந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக தற்போது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்று கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

அதற்கு முன்னதாக ரோகித் சர்மா மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினாலும் பும்ரா இனி கேப்டனாக தொடர வேண்டும் என்று பலரும் கூறும் அளவிற்கு மிகச் சிறப்பாக இந்திய அணியை வழிநடத்தி இருந்தார். இதன் காரணமாக அவருக்கு பலரது மத்தியிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அந்த வகையில் முன்னாள் வீரரான ஆஷிஷ் நெஹ்ரா பும்ரா பற்றி மிக உயர்வாக பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியின் போது கேப்டனான ரோஹித் சர்மா பங்கேற்காத போது தற்காலிக கேப்டனாக இருந்து பும்ரா செயல்பட்ட விதம் மிகச் சிறப்பாக இருந்தது. அவர் அற்புதமாக வழிநடத்தி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.

- Advertisement -

முன்னதாக நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று தோல்விகள் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை தந்த வேளையில் தற்போது இந்த வெற்றி இந்திய அணிக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை அளித்திருக்கும். அதிலும் குறிப்பாக கேப்டனாகவும், ஒரு வேகப்பந்து வீச்சாளராகவும் அவர் செயல்பட்ட விதம் உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விடயம். இதற்கு முன்னர் இதேபோன்று அவர் பலமுறை செய்துள்ளார். ஆனாலும் தற்போது பல அழுத்தத்திற்கு மத்தியில் இந்திய அணியை சரியாக கையாண்டு உள்ளார் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : எங்களுக்கு தேவையான அது கிடைச்சுடுச்சு.. ஆஸி பிரதமர் அணியை வீழ்த்தியது பற்றி கேப்டன் ரோஹித் பேட்டி

பும்ராவை போன்ற ஒரு வீரரை எப்போதுமே குறைத்து மதிப்பிட முடியாது. ஒருவேளை பும்ரா ஐபிஎல் ஏலத்தில் வந்திருந்தால் நிச்சயம் அவரை ஏலத்தில் எடுக்க பல்வேறு அணிகளும் சண்டை இட்டு இருக்கும். அதோடு 520 கோடிகள் இருந்தால் கூட அவரை போன்ற ஒரு வீரரை ஏலத்தில் வாங்க முடியாது என ஆஷிஷ் நெஹ்ரா பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -