எங்களுக்கு தேவையான அது கிடைச்சுடுச்சு.. ஆஸி பிரதமர் அணியை வீழ்த்தியது பற்றி கேப்டன் ரோஹித் பேட்டி

- Advertisement -

ஆஸ்திரேலியா பிரதமர் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய 2 நாட்கள் கொண்ட பகலிராவு பயிற்சி ஆட்டம் நவம்பர் 30ஆம் தேதி துவங்கியது. மழையால் முதல் நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்ட அந்தப் போட்டியின் இரண்டாவது நாளில் ஆட்டம் இருதரப்புக்கும் 46 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய பிரதமர் அணியை அபாரமாக பந்து வீசி 43.2 ஓவரில் 240 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் செய்தது. ஆஸ்திரேலிய அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் சாம் கோன்ஸ்டஸ் சதத்தை அடித்து 107, ஹன்னோ ஜேக்கப்ஸ் 61 ரன்கள் எடுத்தார்கள். இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

- Advertisement -

இந்தியா வெற்றி:

பின்னர் விளையாடிய இந்திய அணிக்கு 75 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜெய்ஸ்வால் 45, கேஎல் ராகுல் 27* ரன்களை அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார்கள். ஆனால் நான்காவது இடத்தில் களம் இறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 3 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடிய சுப்மன் கில் 50* ரன்கள் குவித்து அசத்தினார்.

அவருடன் நித்திஷ் ரெட்டி 42, வாஷிங்டன் சுந்தர் 42*, ரவீந்திர ஜடேஜா 27, சர்பராஸ் கான் 1, படிக்கல் 4* ரன்கள் எடுத்தார்கள். அதனால் 46 ஓவரில் 257-5 ரன்கள் எடுத்த இந்தியா இப்போட்டியில் 6 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா பிரதமர் அணிக்கு அதிகபட்சமாக சார்லி ஆண்டர்சன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

சவாலுக்கு தயார்:

இந்தப் போட்டியில் வென்றது பற்றி கேப்டன் ரோகித் சர்மா பேசியது பின்வருமாறு. “இது சிறப்பாக இருந்தது. அணியாக நாங்கள் விரும்பியது எங்களுக்கு கிடைத்தது. உண்மையான போட்டி நடைபெறாததில் கொஞ்சம் ஏமாற்றம். ஆனால் கிடைத்த நேரத்தை நாங்கள் முடிந்தளவுக்கு அதிகமாக பயன்படுத்தினோம். அதில் எங்களுக்கு முன்பாக இருந்ததில் தேவையான விஷயங்கள் கிடைத்தன”

இதையும் படிங்க: 257 ரன்ஸ்.. ரோஹித் ஏமாற்றம் கில், ஜெய்ஸ்வால், சுந்தர் அபாரம்.. ஆஸி பிரதமர் அணியை வீழ்த்திய இந்தியா

“ஆஸ்திரேலியாவில் எங்களுக்கு ரசிகர்கள் வந்து ஆதரவு கொடுப்பதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. நாங்கள் இங்கே விளையாடிய போது அவர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுக்காத நேரங்கள் இருந்ததில்லை” என்று கூறினார். அந்த வகையில் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் வென்ற இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை வகிக்கிறது. தற்போது பயிற்சி போட்டியில் வென்றுள்ள இந்தியா அடிலெய்ட் நகரில் நடைபெற உள்ள 2வது பகலிரவு போட்டியிலும் போராடி வெல்வதற்கு தயாராக இருக்கிறோம் என்பதை ஆஸ்திரேலியாவுக்கு காண்பித்துள்ளது.

Advertisement