சுப்பன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் முதல் 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள் மற்றும் இரண்டு தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளும் ஏழு போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் முன்னிலையில் இருப்பதால் குஜராத் அணி தற்போது டேபிள் டாப்பராக இருக்கிறது.
உலகின் தலைசிறந்த பீல்டர் இவர்தான் : ஆஷிஷ் நெஹ்ரா
இந்த தொடரின் முதல் போட்டியை தோல்வியுடன் துவங்கிய அந்த அணி அடுத்தடுத்து நான்கு வெற்றிகளைப் பெற மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு கடைசியாக ஏப்ரல் 19-வது தேதியான நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது.
இந்நிலையில் இந்த ஆண்டு குஜராத் அணி நிச்சயம் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ஆஷிஷ் நெஹ்ரா வீரர்களை சரியான முறையில் தேர்வு செய்து சிறப்பாக செயல்பட வைத்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பின்னர் குஜராத் அணியின் தலைமை பயிற்சியாளரான ஆஷிஷ் நெஹ்ரா ஏற்கனவே அளித்த ஒரு பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் ஆஷிஷ் நெஹ்ராவிடம் தற்போதைய உலகின் தலைசிறந்த ஃபீல்டர் யார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆஷிஷ் நெஹ்ரா : எந்த ஒரு தயக்கமும் இன்றி இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜாதான் உலகின் தலைசிறந்த பீல்டர் என்ற பதிலை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : கிரிக்கெட்டில் பல ஆண்டுகள் பல நல்ல பீல்டர்களை நாம் பார்த்து வந்துள்ளோம்.
அதில் சிலர் உள்வட்டத்திலும், சிலர் வெளிவட்டத்திலும் சிறப்பாக செயல்படுவார்கள். அந்த வகையில் பார்க்கையில் ஜாண்டி ரோட்ஸ் உள்வட்டத்தில் சிறப்பாக செயல்படக்கூடிய ஃபீல்டர். ஒட்டுமொத்தமாக பார்க்கையில் ஏபிடி நல்ல பீல்டர் தான். ஆனால் இவர்களுடன் சைமன்ஸ் மற்றும் ஜடேஜா ஆகியோரும் போட்டிக்கு வருவார்கள். என்னை பொறுத்தவரை உலகின் தலைசிறந்த பீல்டர் என்றால் ஜடேஜாவை தான் நான் முதலிடத்தில் வைப்பேன்.
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியை விட மும்பை அணி தான் தனிப்பட்ட முறையில் அந்த வாய்ப்பை தராங்க – மிட்சல் சான்ட்னர் கருத்து
ஏனெனில் தற்போது 36 வயதிலும் அவர் மிகச் சிறப்பான பீல்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். அவர் தனது கரியரின் ஆரம்பத்தில் எவ்வாறு பீல்டிங் செய்தாரோ அதேபோன்று தற்போது வரை மிக அபாரமாக செயல்பட்டு வருகிறார். அந்த அளவிற்கு அவரது பிட்னஸ்சும் அவருக்கு உதவுகிறது என ஆஷிஷ் நெஹ்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.



