ஏன் அடிச்சுக்குறீங்க சஞ்சு சாம்சனுக்கு சான்ஸ் கொடுத்தாலும் ஒன்னும் நடக்க போறதில்ல – உண்மையை விளக்கும் ஆஷிஷ் நெஹ்ரா

sanju samson ashish nehra
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் இளம் இந்திய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை மழைக்கு மத்தியில் 1 – 0 (3) என்ற கணக்கில் கைப்பற்றினாலும் அடுத்ததாக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அதே மழைக்கு மத்தியில் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. ஏனெனில் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்த நிலையில் நவம்பர் 27ஆம் தேதியன்று நடைபெற்ற 2வது கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதனால் கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே குறைந்தபட்சம் இத்தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

Sanju-Samson-and-Dhawan

- Advertisement -

முன்னதாக முதல் போட்டியில் 5 ஓவர்களை மட்டும் பயன்படுத்தியது தோல்விக்கு காரணமாக அமைந்ததால் ஹமில்டன் நகரில் நடைபெற்ற 2வது போட்டியில் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டரான தீபக் ஹூடாவை கொண்டு வந்த இந்திய நிர்வாகம் சஞ்சு சாம்சனை வழக்கம் போல அதிரடியாக நீக்கியது. ஆனால் உங்களுக்கு 6வது பந்து வீச்சாளர் தேவை என்றால் காலம் காலமாக சொதப்பி வரும் ரிஷப் பண்ட்டை நீக்க வேண்டியது தானே என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள். ஏனெனில் ஆரம்ப காலம் முதல் தொடர்ச்சியற்ற வாய்ப்புகள் பெற்று வரும் சஞ்சு சாம்சன் இந்த வருடம் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பார்மில் இருக்கிறார்.

ஒன்னும் ஆகப்போறதில்லை:

குறிப்பாக இத்தொடரின் முதல் போட்டியில் கூட ரிஷப் பண்ட் 10, சூரியகுமார் 4 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 196/4 என தடுமாறிய இந்தியாவை ஸ்ரேயாஸ் ஐயருடன் 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்த அவர் 306 ரன்கள் எடுத்து 306 ரன்கள் எடுக்க உதவினார். அப்படி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் அவருக்கு பதிலாக தீபக் ஹூடா தேர்வு செய்யப்பட்டது சரிதான் என்று முன்னாள் வீரர் ஆசிஸ் நெஹ்ரா கூறியுள்ளார். அதாவது சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை அணியில் இடம் பிடித்திருந்த தீபக் ஹூடா 2023 உலகக்கோப்பை உத்தேச அணியிலும் உள்ளார்.

Rishabh Pant Sanju Samson

மறுபுறம் டி20 உலக கோப்பையில் இடம் பெறாத சஞ்சு சாம்சன் 2023 உலக கோப்பையிலும் கழற்றி விடப்பட உள்ளார். ஏனெனில் அடுத்ததாக நடைபெறும் வங்கதேச ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் தேர்வாகியுள்ள நிலையில் சஞ்சு சாம்சனை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு ரசிகர்களின் கண்துடைப்புக்காகவே நியூசிலாந்து தொடரில் தேர்வு செய்துள்ளது. இந்த நிதர்சனத்தை விளக்கும் வகையில் ஆஷிஷ் நெஹ்ரா பேசியது பின்வருமாறு. “இன்றைய போட்டியில் இந்தியா சரியான 2 மாற்றங்களை செய்தது. ஏனெனில் சிறப்பாக செயல்படாத தாகூருக்கு பதிலாக தீபக் சஹார் கொண்டு வரப்பட்டார். இருப்பினும் அவரை ஒரு போட்டியுடன் நீக்கியது சற்று கடினமான முடிவாகும்”

- Advertisement -

“அதே போல் நானாக இருந்தாலும் நிச்சயம் இப்போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தீபக் ஹூடாவை விளையாடியிருப்பேன். ஏனெனில் டி20 உலக கோப்பை அணியில் இருந்த அடுத்த தொடரிலும் இருப்பார் என்பதால் திடீரென்று தற்போது இல்லாமல் இருப்பது சரியாக இருக்காது. வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷார்துல் தாகூர் ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் நிறைய விளையாடி இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் அதிகம் விளையாடியதில்லை”

“அவர்களுடன் சஹால் விளையாடி வருகிறார். ஆனால் உங்களுக்கு 6வது பந்து வீச்சாளர் கண்டிப்பாக தேவைப்படுகிறது. இருப்பினும் அந்த 6வது பந்து வீச்சாளர் என்னை பொறுத்த வரை தீபக் ஹூடா கிடையாது தீபக் சஹர் ஆவார். எனவே தீபக் ஹூடாவை அவர்கள் பந்து வீச்சுக்காக தேர்வு செய்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். மேலும் டி20 போட்டிகளில் பேட்டிங் மற்றும் பவுலிங் அசத்தும் வாஷிங்டன் சுந்தர் ஒருநாள் போட்டிகளில் உங்களுக்கு சிறந்த 6வது பந்து வீச்சாளராக இருக்க மாட்டார்” என்று கூறினார்.

இதிலிருந்து டி20 உலக கோப்பையை போலவே அடுத்ததாக இந்திய மண்ணில் நடைபெறும் 2023 உலக கோப்பையிலும் சஞ்சு சாம்சன் தேர்வாக மாட்டார் என்பது தெரிய வருகிறது. அதற்காகவே வங்கதேச தொடரில் அவரை சேர்க்காமல் பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு இப்போதே கழற்றி விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement