முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றும்..! இந்திய ரசிகர்களுக்கு நெகிழ்வுடன் நன்றி தெரிவித்த ஆப்கான் வீரர்..!

afganteam
- Advertisement -

சமீபத்தில் டெஸ்ட் அங்கீகாரத்தை பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவிடம் விளையாடியது. அந்த அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி படு தோல்வியடைந்தது. இருப்பினும் இந்தியாவில் விளையாடியது நல்ல உணர்வை கொடுத்தது என்று ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் தெரிவித்துள்ளார்.

 India v Afghanistan

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணி பல்வேறு தடைகளுக்கு பிறகே கிரிக்கெட்டில் டெஸ்ட் அங்கீகாரத்தை பெற்றது. கடந்த வியாழக்கிழமை ஜூன்14 ஆம் தேதி இந்தியாவுடன் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் அனுபவமில்லா ஆட்டம் தான் வெளிப்பட்டது. இந்த போட்டியில் இந்திய அணியிடம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் ரன்கள் வித்தியாசத்தில் தோவியடைந்தது. இருப்பினும் இந்த போட்டிக்கு முன்னாள் வங்கதேச அணியுடன் விளையாடிய தொடரில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்ஸாய் பேசுகையில்’இதற்கு முன்னாள் டெஸ்ட் போட்டியில் விளையாடியது இல்லை. இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பாளிப்த்ததற்கு இந்திய வாரியத்திற்கும், ஆப்கானிஸ்தான் வாரியத்திற்கும் நன்றியை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த போட்டியில் இந்தியா போன்ற பெரிய அணியுடன் எப்படி விளையாட வேண்டும் என்று நிறைய விடயங்களை கற்றுக் கொண்டோம்.

afganistanteam

இந்த போட்டியில் பெற்ற அனுபவம் எங்கள் அணிக்கு எதிர்காலத்தில் உதவும். ஆனால், இந்த போட்டி விரைவாக முடிந்தது கொஞ்சம் ஆச்சர்யத்தை அளித்தது. நாங்கள் சிறந்த அணி தான். விரைவில் எங்கள் குறைகளை சரி செய்து ஒரு நல்ல அணியாக பெயர் எடுப்போம்.இந்திய ரசிகர்களுக்கு என்னுடைய மிக பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் எங்களுக்கு நல்ல ஆதரவை அளித்தனர். நாங்கள் எங்கள் சொந்த மண்ணில் விளையாடியது போன்று உணர்ந்தோம் ‘ என்று கூறியுள்ளார்.

Advertisement