டி20 கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை சமன் செய்த ஆப்கானிஸ்தான் கேப்டன் – விவரம் இதோ

asghar 1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய கேப்டன் என்று பெயரெடுத்த தோனி சர்வதேச அரங்கில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை என அனைத்துவிதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற சாதனையையும் இவர் வைத்துள்ளார். அதுமட்டுமின்றி சர்வதேச அரங்கிலும் தவிர்க்க முடியாத சிறந்த கேப்டன் என்ற பெயரையும் தோனி பெற்றுள்ளார்.

asghar

- Advertisement -

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு முடிவை அறிவித்த தோனி இனி ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடுவேன் என்று கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இருப்பினும் அவர் ஓய்வு பெற்று இத்தனை மாதங்கள் ஆனாலும் அவரை பற்றிய பேச்சுக்கள் குறைந்தபாடில்லை. அந்த வகையில் தற்போது இந்திய அணியின் கேப்டன் தோனியுடன் ஒப்பிட்டு ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பேசப்பட்டு வருகிறார்.

ஏனெனில் இந்திய அணிக்காக கேப்டன் தோனி 72 டி20 போட்டிகளில் தலைமை ஏற்று 41 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது அந்த சாதனையை ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அஸ்கர் ஆப்கான் சமன் செய்துள்ளார். இதுவரை 51 டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்தி உள்ள அவர் 41 வெற்றிகளை பெற்றுத்தந்து தோனியின் அதிக டி20 வெற்றி பெற்ற கேப்டன் என்ற சாதனையை தற்போது சமன் செய்துள்ளார்.

asghar 2

இந்த சாதனையை அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அபுதாபியில் நடைபெற்ற டி20 தொடரில் அவர் செய்துள்ளார். கடைசியாக நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டி20 போட்டியை வென்ற அஸ்கர் ஆப்கான் தோனியின் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற சாதனையை தற்போது சமன் செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற பட்டியலில் தற்போது தோனி மற்றும் அஸ்கர் ஆப்கான் ஆகியோர் முதலிடத்தில் 41 வெற்றிகளை பெற்றுள்ளனர்.

asghar 3

அதனைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் மோர்கன் 33 வெற்றிகளையும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சப்ராஸ் அகமது 29 போட்டிகளில் வெற்றிகளையும் நான்காவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் டேரன் சம்மி 27 வெற்றிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement