
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது நேற்று தரம்சாலா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் தற்போதைய நிலையில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களை மட்டுமே குவித்தது.
பின்னர் 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் கூறுகையில் : நான் இந்த போட்டியில் விளையாடுவதற்காக மைதானத்திற்கு களமிறங்கியதும் அனைவருமே என்னிடம் இதுவும் உனது சொந்த மைதானம் தான். அதனால் சிறப்பாக செயல்படுங்கள் என்று கூறினார்கள். ஆனால் நான் அவர்களிடம் உடனடியாக இது என்னுடைய சொந்த மைதானம் கிடையாது என்று கூறிவிட்டு உள்ளே நுழைந்தேன்.
ஆனால் இந்த மைதானத்திற்குள் வந்ததும் என்னுடைய மனநிலை மிகச் சிறப்பாக இருந்தது. அதனால் என்னுடைய அடிப்படையான பவுலிங் திறனை மனதில் வைத்து சரியான இடத்தில் பந்துவீச வேண்டும் என்று நம்பிக்கையுடன் வந்து வீசினேன். இதுபோன்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் போது பந்துவீச்சில் தீவிர கவனம் இருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய போட்டியில் நான் என்னுடைய லைன் அண்ட் லென்த் மீது மிக கவனமாக இருந்து சரியான இடங்களில் பந்தை வீசினேன்.
இதையும் படிங்க : டெஸ்ட் மாதிரி.. டி20யில் இதை செய்ய வெறும் 5 பந்துகள் போதும்ன்னு அர்ஷ்தீப் காமிச்சுட்டாரு.. ஸ்டைன் பாராட்டு
அப்படி என்னால் சரியான லைன் மற்றும் லெந்த்தை பிடிக்க முடிந்ததால் விக்கெட்டுகள் கிடைத்தன. மைதானத்தில் சிறியளவு உதவி இருக்கும்போது நிச்சயம் நமது பந்துவீச்சிலும் அது வெளிப்படும். அந்த வகையிலே நான் இன்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசியதாக நினைக்கிறேன். கடந்த போட்டி ஒரு மோசமான போட்டியாக அமைந்தது. ஆனால் இந்த போட்டியில் என்னுடைய பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது என அர்ஷ்தீப் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.