- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வேணான்னு சொன்ன ஃபீல்டிங் வெச்சாரு.. உடனே விக்கெட்.. அப்போதான் நம்பனும்ன்னு புரிஞ்சிக்கிட்டேன்.. அர்ஷ்தீப் ஓப்பன்டாக்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்வதற்கு இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் முக்கிய பங்காற்றினார். ஐசிசி 2018 அண்டர்-19 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு பங்காற்றிய அவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் அசத்தினர். அதன் காரணமாக இந்தியாவுக்காகவும் அறிமுகமான அவர் கிடைத்த வாய்ப்புகளில் ஓரளவு நன்றாக செயல்பட்டார்.

அதனால் 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடிய அவர் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்தார். அதை விட 2024 டி20 உலகக் கோப்பையில் 17 விக்கெட்டுகள் அசத்திய அவர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மேலும் ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் (17) எடுத்த வீரர் என்ற உலக சாதனையும் அவர் இத்தொடரில் படைத்தார்.

- Advertisement -

பும்ராவை நம்பனும்:
அந்த வகையில் இந்த தொடரில் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு நிகராக அர்ஷ்தீப் சிங் செயல்பட்டதாலேயே இந்தியா கோப்பையை வென்றதாக ரமீஸ் ராஜா போன்ற சில முன்னாள் வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்து ரிவர்ஸ் ஸ்விங்காவதை பார்த்த பும்ரா அதற்குத் தகுந்த ஃபீல்டிங்கை தமக்கு செட்டிங் செய்ததாக அர்ஷ்தீப் சிங் கூறியுள்ளார்.

இருப்பினும் பந்து அங்கு செல்லாது என்று தாம் நினைத்ததால் அந்த செட்டிங் வேண்டாம் என்று பும்ராவிடம் சொன்னதாகவும் அர்ஷ்தீப் கூறியுள்ளார். ஆனால் பும்ரா வற்புறுத்தலாக அதே செட்டிங்கை வைத்த காரணத்தால் அடுத்த சில பந்துகளில் தமக்கு விக்கெட் கிடைத்ததாக அர்ஷ்தீப் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது தான் பும்ராவை நம்ப வேண்டும் என்பதை புரிந்து கொண்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்போர்ட்ஸ்டார் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பந்து ரிவர்ஸ் ஸ்விங்கானது. எனவே ஃபீல்டிங்கை மாற்றி டீப் பகுதியில் ஒருவரை நிறுத்துமாறு பும்ரா எனக்கு பரிந்துரைத்தார். ஏனெனில் பந்து திரும்புவதால் பேட்ஸ்மேன் அங்கே அடிப்பார் என்று பும்ரா கணித்தார். இருப்பினும் பந்து அங்கு செல்லாது என்று நான் நினைத்ததால் அதை ஏற்கவில்லை. ஆனால் என்னை நம்பி அந்த ஃபீல்டரை வைக்குமாறு பும்ரா கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: ஸ்டார்க், ஸ்டார்க் என அமெரிக்காவில் கத்திய ரசிகர்களிடம்.. ரோஹித் சர்மா வைத்த பெருந்தன்மையான கோரிக்கை

“எனவே அவரை நம்பிய நான் கொஞ்சம் பந்தை அகலமாக வீசினேன். அந்த பந்து பேட்ஸ்மேனிடம் எட்ஜ் வாங்கிக்கொண்டு பும்ரா சொன்ன அதே ஃபீல்டரை நோக்கிச் சென்றது. அப்போது என் மீது நம்பிக்கை வைத்தால் நல்ல முடிவு தேடி வரும் என்று பும்ரா மீண்டும் சொன்னார். அப்போது தான் அவர் சொல்வதையெல்லாம் பின்பற்றி என்னுடைய சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்பதை நானும் உணர்ந்தேன்” என்று கூறினார்.

- Advertisement -