- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இன்னும் 4 விக்கெட் போதும்.. அஷ்வினின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – அர்ஷ்தீப் சிங்

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் அமெரிக்கா அணியை எதிர்த்து விளையாடிய இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக தங்களது இரண்டாவது லீக் போட்டியில் நமீபியா அணியை இன்று எதிர்கொள்ள இருக்கிறது.

ரவிச்சந்திரன் அஷ்வினின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங் :

அதன்படி இன்று இரவு நடைபெற இருக்கும் இந்த இந்தியா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் ஒரு மாபெரும் சாதனை ஒன்றினை டி20 உலக கோப்பை தொடரில் படைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக உலகக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தில் உள்ளார். அஷ்வின் 24 டி20 உலக கோப்பை போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அவருக்கு அடுத்து தற்போது இரண்டாவது இடத்தில் அர்ஷ்தீப் சிங் 29 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். அர்ஷ்தீப் சிங்கை பொறுத்தவரை இதுவரை 15 டி20 உலக கோப்பை போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு.. நம்பிக்கை அளிக்க வரும் ஸ்டீவ் ஸ்மித் – விவரம் இதோ

இன்றைய நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் அவர் மேலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் டி20 உலக கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டை வீழ்த்திய இந்திய வீரராக முதலிடத்தில் இருக்கும் ரவிச்சந்திரன் அஷ்வினை பின்னுக்கு தள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்களுக்கு அடுத்து ஜஸ்ப்ரீத் பும்ரா 26 விக்கெட்டுகளுடனும், ஹார்திக் பாண்டியா 24 விக்கட்டுகளுடனும், ரவிந்திர ஜடேஜா 22 விக்கெட்டுகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -