வீடியோ : அடுத்தடுத்த பந்துகளில் 2 மிடில் ஸ்டம்ப்பை உடைத்த அர்ஷ்தீப் – ரோகித், சூரியகுமாரை தாண்டி மும்பை வெற்றியை பறித்தது எப்படி

Arshdeep Singh Stumps
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 22ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 31வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு மேத்தியூ ஷார்ட் 11 (10) ரன்களில் அவுட்டாக மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாட முயற்சித்து 26 (17) ரன்களில் அர்ஜுன் டெண்டுல்கரின் யார்ர்கர் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அதர்வா டைட் 29 (17) ரன்களில் அதிரடியாக விளையாட முயன்று அவுட்டாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியம் லிவிங்ஸ்டன் 10 (12) ரன்களில் நடையை கட்டினார்.

அதனால் 83/4 என சரிந்த அந்த அணியை அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் சாம் கரண் – ஹர்ப்ரீத் சிங் ஆகியோர் அதிரடியாக விளையாடி மீட்டெடுத்தனர். குறிப்பாக அர்ஜுன் டெண்டுல்கர் வீசிய 16வது ஓவரில் 31 ரன்களை தெறிக்க விட்டு சரிவை சரி செய்து 5வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பஞ்சாப்பை காப்பாற்றிய அந்த ஜோடியில் ஹர்ப்ரீத் சிங் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 41 (28) ரன்களும் சாம் கரண் 5 பவுண்டரி 4 சிக்ஸருடன் 55 (29) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க கடைசியில் ஜித்தேஷ் சர்மா 4 சிக்ஸருடன் 27 (7) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

அதனால் 20 ஓவர்களில் பஞ்சாப் 214/8 ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 215 ரன்களை துரத்திய மும்பைக்கு ஆரம்பத்திலேயே இசான் கிசான் 1 (4) ரன்னில் நடையை கட்டினாலும் அடுத்து வந்த கேமரூன் கிரீனுடுடன் இணைந்த கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக செயல்பட்டு 2வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 44 (27) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அந்த நிலைமையில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் மிரட்டலாக பேட்டிங் செய்து விரைவாக ரன்களை சேர்த்த நிலையில் அவருடன் மறுபுறம் இணைந்து அட்டகாசமாக பேட்டிங் செய்த கேமரூன் கிரீன் அரை சதமடித்து 3வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 67 (43) ரன்களை விளாசி அவுட்டானார். இருப்பினும் இந்த போட்டியில் தடுமாறாமல் அதிரடியாக செயல்பட்டு பழைய ஃபார்முக்கு திரும்பிய சூரியகுமார் யாதவ் அரை சதமடித்து 7 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்டு 57 (26) ரன்களை விளாசி கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அவரை தொடர்ந்து டிம் டேவிட் அதிரடியாக 2 சிக்ஸர்களை பறக்க விட்டதால் வெற்றியை நெருங்கிய மும்பைக்கு அரஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அதில் முதல் பந்தில் டிம் டேவிட் சிங்கிள் எடுக்க 2வது பந்தில் ரன் எடுக்காத திலக் வர்மா 3வது பந்தில் களீன் போல்ட்டானார். குறிப்பாக அதிரடியான வேகத்தில் வீசி மிடில் ஸ்டம்ப்பை இரண்டாக உடைத்த அரஷ்தீப் சிங் அடுத்ததாக இம்பேக்ட் வீரராக களமிறங்கிய நேஹால் வதேராவையும் அதே போல அடுத்த பந்திலேயே கிளீன் போல்டாக்கி மிடில் ஸ்டம்பை மீண்டும் இரண்டாக உடைத்தார்.

இறுதியில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 பந்துகளில் 1* ரன் மட்டும் எடுத்தாதல் டிம் டேவிட் 25* (13) ரன்கள் எடுத்தும் 20 ஓவர்களில் மும்பை 201/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக அரஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

இதையும் படிங்க:வீடியோ : அடுத்தடுத்த பந்துகளில் 2 மிடில் ஸ்டம்ப்பை உடைத்த அர்ஷ்தீப் – ரோகித், சூரியகுமாரை தாண்டி மும்பை வெற்றியை பறித்தது எப்படி

இந்த போட்டியில் பேட்டிங்க்கு சாதகமாக இருந்த வான்கடே மைதானத்தில் 2 அணிகளுமே அதிரடியாக பேட்டிங் செய்து வெற்றிக்கு போராடின. இருப்பினும் டிம் டேவிட், திலக் வர்மா போன்ற அதிரடி வீரர்களை கடைசி ஓவரில் அவுட்டாக்கிய அரஷ்தீப் சிங் தான் சந்தேகமின்றி வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தி அதை பஞ்சாப் அணியின் பக்கம் சாய வைத்தார் என்றே சொல்லலாம்.

Advertisement