IND vs IRE : வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அசத்தும் அர்ஷ்தீப் சிங் – பும்ராவை முந்தி டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை

Arshdeep Singh
- Advertisement -

அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து குணமடைந்து கம்பேக் கொடுத்து கேப்டனாக தலைமை தாங்கும் இத்தொடரின் முதல் போட்டியில் மழைக்கு மத்தியில் வென்ற இந்தியா 2வது போட்டியிலும் 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே 2 – 0* என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியுள்ளது. டப்லின் நகரில் நடைபெற்ற 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ருதுராஜ் 58, சஞ்சு சாம்சன் 40, ரிங்கு சிங் 38, சிவம் துபே 22* என முக்கிய பேட்ஸ்மேன்களின் அதிரடியான ரன் குவிப்பால் 20 ஓவர்களில் 185/5 ரன்கள் சேர்த்தது.

Rinku-samson-ruturaj

- Advertisement -

அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக பேரி மெக்கார்த்தி 2 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 186 ரன்கள் சேசிங் செய்த அயர்லாந்துக்கு ஆண்ட்டி பார்பரின் அதிரடியாக 72 (51) ரன்கள் எடுத்தும் இதர முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் அயர்லாந்தை 20 ஓவரில் 152/8 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்ற இந்தியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

நம்பிக்கை நட்சத்திரம்:
அந்த வகையில் இந்த வெற்றிக்கு அனைத்து வீரர்களும் முக்கிய பங்காற்றியதை போல 5 பவுண்டரி 4 சிக்ஸருடன் 72 (51) ரன்கள் குவித்து இந்தியாவுக்கு அச்சுறுத்தலை கொடுத்த ஆண்டி பால்பரினை முக்கிய நேரத்தில் அவுட்டாக்கிய அர்ஷிதீப் சிங்கும் கருப்பு குதிரையாக செயல்பட்டார். கடந்த 2018 அண்டர்-19 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றி 2019 முதல் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் கடந்த 2022 ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 தொடரில் அறிமுகமான அவர் உம்ரான் மாலிக் போல் அல்லாமல் நல்ல லைன், லென்த் போன்ற விவேகத்தை பின்பற்றி வெற்றிகரமாக செயல்பட துவங்கினார்.

IND vs IRE Arshdeep Prasid krishna

அதன் காரணமாக 2023 ஆசிய கோப்பையில் வாய்ப்பு பெற்று ஓரளவு சிறப்பாக செயல்பட்டதால் 2022 டி20 உலக கோப்பையில் தேர்வான அவர் புவனேஸ்வர் குமார், முகமது ஷமி போன்றவர்களை மிஞ்சி அதிக விக்கெட்களை எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்தார். அதனால் இடது கை வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் அவர் ஜாம்பவான் வாசிம் அக்ரம் போல ஸ்விங் செய்வதாகவும் இந்தியாவின் நீண்ட கால தேடலுக்கு பரிசாக ஜஹீர் கான் இடத்தை நிரப்பும் அளவுக்கு வந்துள்ளதாகவும் நிறைய முன்னாள் வீரர்கள் பாராட்டினர்.

- Advertisement -

அந்த நிலைமையில் கடந்த ஜனவரியில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று டி20 தொடரில் நோ-பால்களை போட்டு தள்ளி மோசமான உலக சாதனை படைத்த காரணத்தால் 2023 உலகக்கோப்பை உத்தேச அணியில் கழற்றி விடப்பட்டுள்ள அர்ஷிதீப் சிங் இது போன்ற கிடைக்கும் வாய்ப்புகளில் முடிந்தளவுக்கு சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் இதுவரை கிடைத்த வாய்ப்புகளில் அவர் 33 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை 8.49 என்ற ஓரளவு நல்ல எக்கனாமியில் எடுத்துள்ளார்.

Arshdeep-Singh

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை தகர்த்துள்ள அவர் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. அர்ஷிதீப் சிங் : 33 போட்டிகள்*
2. ஜஸ்பிரித் பும்ரா : 41 போட்டிகள்
3. புவனேஸ்வர் குமார் : 50 போட்டிகள்
4. ஹர்திக் பாண்டியா : 66 போட்டிகள்

- Advertisement -

அதே போல பந்துகள் அடிப்படையிலும் வேகமாக 50 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். அந்த பட்டியல்:
1. குல்தீப் யாதவ் : 638
2. அர்ஷிதீப் சிங் : 663
3. யுஸ்வேந்திர சஹால் : 800
4. ஜாஸ்ப்ரித் பும்ரா : 894
5. ரவிச்சந்திரன் அஸ்வின் : 947

Arshdeep Singh

இதையும் படிங்க:IND vs IRE : கடைசி கட்டத்துல அவங்கள பாத்ததும் என்ன பண்றதுனே புரியல. தோல்விக்கு பிறகு புலம்பிய – அயர்லாந்து கேப்டன்

முன்னதாக இன்னும் கொஞ்சம் வேகத்தை அதிகரித்தால் இந்தியாவுக்காக நீண்ட காலம் சிறப்பாக செயல்படும் அளவுக்கு அர்ஷிதீப் சிங்கிடம் திறமை இருப்பதாக ஜாம்பவான் வாசிம் அக்ரம் சமீபத்தில் பாராட்டியிருந்தார். அதை நிரூபிக்கும் வகையில் அசத்தி வரும் அவர் இன்னும் முன்னேறி வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement