IND vs IRE : கடைசி கட்டத்துல அவங்கள பாத்ததும் என்ன பண்றதுனே புரியல. தோல்விக்கு பிறகு புலம்பிய – அயர்லாந்து கேப்டன்

Paul-Stirling
- Advertisement -

அயர்லாந்து அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதன்மை இந்திய வீரர்களுக்கும், இரண்டாம் தர இந்திய அணியின் வீரர்களுக்கும் ஓய்வளிக்கப்பட்டு இருக்கும் வேளையில் பும்ரா தலைமையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியை எதிர்த்து அயர்லாந்து அணி தற்போது விளையாடி வருகிறது. இருப்பினும் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி அயர்லாந்து அணியை மிகச் சிறப்பாக கையாண்டு வருகிறது.

IND-vs-IRE

- Advertisement -

ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற இந்திய அணியானது நேற்று டப்ளின் நகரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த தொடரில் ஒரு போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் நேற்றைய போட்டியில் களமிறங்கிய அயர்லாந்து அணியானது இந்திய அணியை சமாளிக்க முடியாமல் 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது.

Samson-and-Ruturaj

இந்திய அணி சார்பாக துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களும், சஞ்சு சாம்சன் 40 ரன்களும் குவித்து அசத்தினர். பின்னர் 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய அயர்லாந்து அணியில் துவக்க வீரர் பால்பர்னி 72 ரன்கள் குவித்தார். அவரை தவிர்த்து வேறு எந்த வீரரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.

- Advertisement -

இதன்காரணமாக அயர்லாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 மட்டுமே குவித்தது. இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்த அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டெர்லிங் கூறுகையில் : இந்த போட்டியில் எங்களுக்கான வாய்ப்பு இருந்ததாகவே கருதுகிறேன். ஆனால் அதனை நாங்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்த போட்டி நடைபெற்ற 40 ஓவர்கள் முழுவதுமே எங்களுக்கு மிகவும் பாசிட்டிவாகவே இருந்தது.

இதையும் படிங்க : 2023 ஆசியக்கோப்பை தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி அதிகாரபூர்வ அறிவிப்பு – முழு லிஸ்ட் இதோ

ஆனாலும் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும்போது கடைசி சில ஓவர்கள் எங்களால் அவர்களுக்கு எதிராக சரியாக பந்துவீச முடியாமல் போனது. கடைசி கட்டத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிக அதிரடியாக விளையாடினர். அவர்களுக்கு எதிராக பந்து வீசுவது கடினமாக மாறியது. இதுபோன்ற ஒரு சில குறைகளை நிவர்த்தி செய்து கொண்டு மீண்டும் அடுத்த போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்ப விரும்புகிறோம் என பால் ஸ்டெர்லிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement