
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியானது இந்த தொடரில் இரண்டு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது வரும் ஜூலை 31-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் அங்கு தீவிர வலைப்பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இந்த தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டதால் அவர் ஐந்தாவது போட்டியில் ஓய்வெடுத்துக் கொள்வார் என்று தெரிகிறது.
அப்படி அவர் ஐந்தாவது போட்டியில் ஓய்வெடுக்கும் பட்சத்தில் அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போதைய இந்திய அணியின் இரண்டு முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் அடுத்த போட்டியில் விளையாட இருக்கும் வேளையில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக விளையாடப்போகும் வீரர் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் கடந்த போட்டியின் போது அறிமுகமான அன்ஷுல் கம்போஜ் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் அவர் வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளது. அப்படி அவர் வெளியேற்றப்படும் பட்சத்தில் இந்த அறிமுக வாய்ப்பை அர்ஷ்தீப் சிங் பெறுவார். ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போதே அவர் அறிமுகம் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தையல் போட்டுக் கொண்ட அவரால் நான்காவது போட்டியில் இடம்பிடிக்க முடியவில்லை.
இதையும் படிங்க : தற்போதைய டெஸ்ட் அணியின் முதுகெலும்பாக கே.எல் ராகுல் இதை செய்றாரு – ஆகாஷ் சோப்ரா பாராட்டு
இந்நிலையில் அந்த காயத்திலிருந்து தற்போது மீண்டு வந்துள்ள அர்ஷ்தீப் சிங் ஐந்தாவது போட்டியில் இடம் பெறுவார் என்று தெரிகிறது. 26 வயதான அர்ஷ்தீப் சிங் ஏற்கனவே இந்திய அணிக்காக கடந்த 2022-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 63 டி20 போட்டிகள் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.