IPL 2023 : முழுசா 4 ஓவர் கூட போட முடியல, அர்ஜுன் டெண்டுல்கர் வெறும் எக்ஸ்ட்ரா பவுலர் அவ்ளோ தான் – முன்னாள் வீரர் விமர்சனம்

Arjun Tendulkar
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற்ற 35வது லீக் போட்டியில் மும்பையை 55 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நடப்பு சாம்பியன் குஜராத் தங்களுடைய 5வது வெற்றியை பதிவு செய்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 207/6 ரன்கள் விளாசியது. அதிகபட்சமாக தொடக்க வீரர் சுப்மன் கில் 56 (34) ரன்கள் எடுக்க டெத் ஓவர்களில் மும்பை பவுலர்களை அடித்து நொறுக்கிய அபினவ் மனோகர் 42 (21) ரன்களும் டேவிட் மில்லர் 46 (22) ரன்களும் ராகுல் திவாடியா 20* (5) ரன்களும் விளாசினர்.

Noor Ahmad

- Advertisement -

அதைத்தொடர்ந்து 208 ரன்களை துரத்திய மும்பைக்கு ரோஹித் சர்மா 2 (8), இசான் கிசான் 13 (21), திலக் வர்மா 2 (3), டிம் டேவிட் 0 (2) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்ததால் நேஹல் வதேரா 40 (21) ரன்களும் சூரியகுமார் யாதவ் 23 (12) ரன்களும் எடுத்தும் 20 ஓவர்களில் 152/9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்தளவுக்கு பந்து வீச்சிலும் அசத்தி வெற்றி கண்ட குஜராத் சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

எக்ஸ்ட்ரா பவுலர்:
முன்னதாக இந்த போட்டியில் டெத் ஓவர்களில் மும்பை பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக கேமரூன் க்ரீன், பெரன்ஃடாப் போன்ற ஓரளவு அனுபவிக்க முதன்மை பவுவலர்களே ரன்களை வாரி வழங்கியதால் பவர் பிளே ஓவர்களில் புதிய பந்தை ஸ்விங் செய்து 2 ஓவர்களில் வெறும் 9 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட் எடுத்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் அர்ஜுன் டெண்டுல்கருக்கு எஞ்சிய 2 ஓவர்களை ரோகித் சர்மா வழங்கவில்லை.

PBKS vs MI Arjun tendulkar

இந்த வருடம் அறிமுகமாகி கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 2 ஓவர்கள் மட்டுமே வீசிய அவர் ஹைதெராபாத்துக்கு எதிராகவும் ஆரம்பத்தில் 2 ஓவர்கள் வீசினார். அதனால் அப்போட்டியில் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட போது ரோகித் சர்மா கொடுத்த வாய்ப்பில் புவனேஸ்வர் குமாரை அவுட்டாக்கிய அர்ஜுன் முதல் விக்கெட்டை எடுத்து அசத்தினார். ஆனாலும் வெறும் 110 – 120 கி.மீ சராசரி வேகத்தில் வீசும் அவரை புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக ஏதேனும் பேட்ஸ்மேன்கள் இருந்திருந்தால் அடித்து நொறுக்கியிருப்பார்கள் என்று ரசிகர்கள் விமர்சித்தனர்.

- Advertisement -

அந்த நிலையில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் 16வது ஓவரை வீச ரோகித் சர்மா வாய்ப்பு கொடுத்தார். ஆனால் எதிர்பார்க்கப்பட்டது அதில் சாம் கரண் – ஹர்ப்ரீத் சிங் ஆகியோர் அடித்து நொறுக்கியதால் 31 ரன்கள் வாரி வழங்கிய அர்ஜுன் மோசமான சாதனை படைத்தார். அதனால் இப்போட்டியில் 2 ஓவருடன் நிறுத்திக் கொண்ட ரோகித் சர்மா டெத் ஓவர்களில் அர்ஜுன் அடி வாங்குவதிலிருந்து காப்பாற்றினார் என்று சொல்லலாம். மொத்தத்தில் இதுவரை களமிறங்கிய 4 போட்டிகளிலும் அர்ஜுன் முழுமையாக 4 ஓவர்கள் வீசவில்லை. அதனால் மும்பை அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு எக்ஸ்ட்ரா பவுலரை போல் மட்டுமே செயல்பட்டு வருவதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மற்றும் பிரபல பயிற்சியாளர் டாம் மூடி விமர்சித்துள்ளார்.

அதாவது இப்போதைக்கு குறைவான வேகத்தை கொண்டுள்ள அவர் பகுதி நேர பவுலரை போல் மட்டுமே செயல்படுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “3வது ஓவரை அவர் சிறப்பாக வீசுவார் என்று நீங்கள் கேரண்டியாக சொல்ல முடியாது. ஏனெனில் அவரை விட சிறந்த அனுபவமிக்க பவுலர்கள் கூட ரன்களை வாரி வழங்கினர். எனவே அவரிடம் எக்ஸ்ட்ராவாக ஒரு ஓவரை கொடுக்கலாம் என்று நீங்கள் பேராசை படக்கூடாது. டெண்டுல்கர் தன்னுடைய வேலையை செய்தார். இருப்பினும் அவர் சப்ஸ்டியூட் வீரரை போலவே செயல்பட்டார்”

இதையும் படிங்க:GT vs MI : குஜராத் அணிக்காக நல்லா விளையாடணும்னு அவரு கடுமையா உழைக்குறாரு – இளம்வீரர் பற்றி ரஷீத் கான் பாராட்டு

“சொல்லப்போனால் அவர் எக்ஸ்ட்ரா பவுலர். ஏனெனில் எக்ஸ்ட்ரா பவுலர்கள் தான் முழுமையாக 4 ஓவர்களை வீச மாட்டார்கள். இருப்பினும் டாப் ஓவர்களில் அவர் 9 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். ஆனால் அதன் காரணமாக அவரை டெத் ஓவர்களில் பயன்படுத்தலாம் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. ஏனெனில் சர்வதேச வீரரான கேமரூன் கிரீன் இப்போட்டியில் சுமாராக பந்து வீசினார்” என்று கூறினார்.

Advertisement