GT vs MI : குஜராத் அணிக்காக நல்லா விளையாடணும்னு அவரு கடுமையா உழைக்குறாரு – இளம்வீரர் பற்றி ரஷீத் கான் பாராட்டு

Rashid Khan
- Advertisement -

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான ஹார்டிக் பாண்டியாவின் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக தொடரிலேயே தங்களது ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் வென்றது. அதனைத்தொடர்ந்து நடப்பு சாம்பியனாக இந்த பதினாறாவது ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் குஜராத் அணி இதுவரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் பேட்டிங் செய்தாலும் சரி, இரண்டாவது பேட்டிங் செய்தாலும் சரி குஜராத் அணி தங்களது பலத்தை முழுமையாக வெளிப்படுத்தி முன்னணி அணிகளை வீழ்த்தி வருகிறது.

GT vs MI 1

- Advertisement -

அந்த வகையில் நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற 35-வது லீக் ஆட்டத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இப்படி குஜராத் அணி வெற்றிகளை தொடர்ந்து குவித்து வருவதற்கு அந்த அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் முக்கிய காரணமாக திகழ்கின்றனர்.

ஏனெனில் ஒவ்வொரு அணியில் இருக்கும் ஒரு சில வீரர்கள் மட்டுமே சிறப்பாக விளையாடும் வேளையில் குஜராத் அணியில் விளையாடும் அனைவருமே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அந்த அணி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வருகிறது. இந்நிலையில் குஜராத் அணியின் முன்னணி பந்துவீச்சாளரான ரஷீத் கான் அந்த அணியில் தற்போது புதிதாக இணைந்துள்ள இளம் வீரரான நூர் முகமதுவை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

Noor Ahmad 1

இது குறித்து அவர் கூறுகையில் : கடந்த ஆண்டு எங்களது அணியுடன் இணைந்த நூர் அகமது பயிற்சிகளின் போது மிகச் சிறப்பாக பந்து வீசினார். அதோடு பந்துவீச்சில் புது புது விடயங்களை கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கும் அவர் என்னிடம் எப்பொழுதுமே பவுலிங் குறித்த ஆலோசனை கேட்டு பயிற்சி செய்து வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக இரவு ஒரு மணி, இரண்டு மணி இருந்தால் கூட என்னுடன் ஜிம்மில் அவர் உடற்பயிற்சி செய்வதுடன் பந்துவீச்சு குறித்த பல்வேறு ஆலோசனைகளை கேட்டுக்கொண்டு அதன்படியே வலைப்பயிற்சியிலும் பிரமாதமாக செயல்பட்டு வருகிறார். அவருடன் இணைந்து பந்துவீசி வருவதில் மகிழ்ச்சி. குஜராத் அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அவர் கடினமாக உழைக்கிறார்.

இதையும் படிங்க : GT vs MI : இந்த டீம்ல இருக்குறது என்னோட லக். தனது அதிரடிக்கான காரணத்தை கூறிய – ஆட்டநாயகன் அபினவ் மனோகர்

ஆப்கானிஸ்தான் அணியில் என்னுடன் பயணிக்கும் அவர் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்படுவது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். நேற்றைய போட்டியில் நான்கு ஓவர்களை வீசிய நூர் அகமது 37 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement