ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு கொழும்பு நகரில் துவங்குகிறது. அதில் நடப்பு சாம்பியன் இலங்கை மற்றும் இந்திய ஆகிய அணிகள் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. இவ்விரு அணிகளில் லீக் சுற்றில் நேபாளை தோற்கடித்த இந்தியா சூப்பர் 4 சுற்றில் பரம எதிரி பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை வெற்றி பெற்றது.
அதே போல நடப்பு சாம்பியன் இலங்கையையும் அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தொடர் வெற்றி நடை போட்ட இந்தியா கத்துக்குட்டியான வங்கதேசத்திடம் கடைசி போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமல் சந்தித்த அந்த தோல்வியால் கவலைப்பட வேண்டியதில்லை என்று கூறிய கேப்டன் ரோஹித் சர்மா ஃபைனல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி காண்போம் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
கில் பைத்தியமா:
மறுபுறம் இதே தொடரில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளை லீக் சுற்றில் தோற்கடித்த இலங்கை சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிடம் தோற்றாலும் பாகிஸ்தானை தோற்கடித்து வெளியேற்றி தங்களை நடப்பு சாம்பியன் என்பதை நிரூபித்தது. எனவே சொந்த மண்ணில் சொந்த ரசிகர்கள் ஆதரவுடன் வலுவான இந்தியாவை கோப்பையை தக்க வைக்கும் முனைப்புடன் இலங்கை போராடுவதற்கு தயாராகியுள்ளது.
இந்த நிலைமையில் இப்போட்டியில் பங்கேற்பதற்காக வலைப்பயிற்சிகளை மேற்கொண்ட இந்திய அணியினர் அதை முடித்துக் கொண்டு ஹோட்டல் அறைக்கு திரும்பியதாக தெரிகிறது. அப்போது மேல் மாடிக்கு செல்வதற்காக லிஃப்ட் அருகில் நின்று கொண்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா தனது முன் நின்ற சுப்மன் கில்லிடம் “நான் அதை செய்ய மாட்டேன். நீ என்ன பைத்தியமா” என்று கோபத்துடன் சத்தமாக திட்டும் வகையில் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
அதை அங்கிருந்து சில ரசிகர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது தற்போது வைரலாகி வருகிறது. அதைப் பார்க்கும் ரசிகர்கள் ரோஹித் சர்மா இப்படி சொல்லும் அளவுக்கு சுப்மன் கில் அப்படி என்ன சொல்லியிருப்பார் என்று கலகலப்பான கணிப்புகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அதில் சில ரசிகர்கள் “லிஃப்ட் பழுதாகி இருப்பதால் நாம் மாடி படியில் நேராக நடந்து செல்வோம்” என்று கில் கூறியதாக சொல்கின்றனர்.
Gill : bhai lagta hai seedhi se jana padega..lift kharab hai..
Rohit: mere se nahi hoga.. pagal hai kya… 😂😂
— Amit Soni 🇮🇳 (@amit7soni) September 16, 2023
அதனாலேயே ரோகித் சர்மா கோபமடைந்து “என்னால் முடியாது” என்று பதிலளித்ததாகவும் ரசிகர்கள் கலகலப்பை வெளிப்படுத்துகின்றனர். அதாவது ஏற்கனவே ரோகித் சர்மா சமீப காலங்களில் சுமாரான ஃபிட்னஸ் கடைபிடிப்பதாக கபில் தேவ் உட்பட பல முன்னாள் வீரர்களின் விமர்சனங்களுக்கு உள்ளானார். அதனால் மாடி படியில் ஏறுவதற்கு நினைத்து ரோஹித் அப்படி சொல்லியிருக்கலாம் என்று ரசிகர்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.