- Advertisement -
உலகக் கோப்பை 2023

ஜோடியாக திட்டம் போட்ட கோலி – ரோஹித், அசத்திய சிராஜ்.. மந்திரம் போட்டு மேஜிக் செய்த பாண்டியா

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த இந்தியா – மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி அகமதாபாத் நகரில் மதியம் 2 மணிக்கு துவங்கியது. அதில் உலகக் கோப்பையில் முதல் முறையாக இந்தியாவை தோற்கடிக்கும் முனைப்புடன் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் களமிறங்கியது.

மறுபுறம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களின் ஆதரவுடன் சொந்த மண்ணில் இம்முறையும் பாகிஸ்தானை தோற்கடித்து உலகக் கோப்பையில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை காப்பாற்றும் முனைப்புடன் களமிறங்கிய இந்தியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்திய அணியில் இஷான் கிஷனுக்கு பதிலாக சுப்மன் கில் தேர்வானது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

- Advertisement -

அசத்துமா இந்தியா:
அதை தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷபிக் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் நிதானம் கலந்த அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். குறிப்பாக சிராஜ் வீசிய ஒரு ஓவரில் இமாம் ஹாட்ரிக் பவுண்டரிகளை அடித்து சவாலை துவக்கினார்.

அப்போது 8வது ஓவரின் துவக்கத்தில் இந்தியாவின் முன்னாள், இந்நாள் கேப்டங்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து எப்படி பார்ட்னர்ஷிப்பை உடைக்கலாம் என்று சிராஜிடம் பேசினார்கள். சொல்லி வைத்தார் போல் அதே ஓவரின் கடைசி பந்தில் முகமது சிராஜ் தன்னுடைய சிறப்பான வேகத்தால் ஷபிக்கை 20 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாக்கினார்.

- Advertisement -

அதே போல மறுபுறம் 6 பவுண்டரியுடன் சவாலை கொடுத்த இமாம் 36 (38) ரன்கள் எடுத்திருந்த போது 12வது ஓவரில் ஹர்திக் பாண்டியா வேகத்தில் கொடுத்த கேட்ச்சை கே.எல் ராகுல் அபாரமாக பிடித்ததால் ஆட்டமிழந்தார். சொல்லப்போனால் மலிங்கா முத்தமிடுவதைப் போல அந்த பந்துக்கு முன்பாக அவர் ஏதோ மந்திரம் போடுவது போல் வேண்டி வீசியதுவே போலவே விக்கெட் கிடைத்தது ரசிகர்களுக்கு வியப்பாக இருந்தது.

இதையும் படிங்க: இப்போ தான் குணமடைஞ்சு வந்தாரு.. மறுபடியுமா விலகலா? வில்லியம்சனுக்கு நேர்ந்த பரிதாபம்.. ரசிகர்கள் சோகம்

அவர்களைத் தொடர்ந்து கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் தற்போது இந்திய பவுலர்களுக்கு சவாலை கொடுத்து பாகிஸ்தானுக்கு பெரிய ஸ்கோர் குவிக்கும் முனைப்புடன் விளையாடி வருகின்றனர். இருப்பினும் அவர்களையும் சாய்த்து பாகிஸ்தானை 300 ரன்கள் தொடுவதை தடுக்கும் முனைப்புடன் இந்திய பவுலர்கள் போராடி வருகின்றனர். அதனால் சற்றுமுன் வரை 20 ஓவரில் பாகிஸ்தான் 103/2 ரன்கள் எடுத்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -