கடைசி ஓவரில் மும்பையை கதிகலங்க வாய்த்த ராஜஸ்தான் வீரர்…மும்பை படுதோல்வி !

Mi Mumbai
- Advertisement -

நேற்று நடந்த இரு ஐ பி எல் போட்டிகள் ரசிகர்களை இருக்கையின் முனைக்கு கொண்டுவர வைத்தது . நேற்று மாலை நடந்த சென்னை மற்றும் ஹைட்ரபாத்திற்கு இடையேயான போட்டியும் சரி , இரவு  நடந்த மும்பை மற்றும் ராஜஸ்தான் போட்டியிலும் சரி பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது . இருப்பினும் ராஜஸ்தான் மற்றும் மும்பை ஆடிய போட்டி ரசிகர்களுக்கு சற்று ஹார்ட் பீட்டயே அதிகரித்து இருந்தது என்றே கூறலாம்.

நேற்று இரவு ஜெய்ப்பூர் சவால் மணி சிங் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் கள மிறங்கிய யாதவ் மற்றும் லீவிஸ் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினர் . ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் தொடக்க ஆட்டக்காரர் லெவிஸ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார் . ஆனால் அதன் பின்னர் களமிறங்கிய கிஷான் யாதவிற்கு பக்க பலமாக ஆடி ரன்கலை குவித்தார் .

- Advertisement -

இவர்கள் இருவரும் சேர்ந்து 100 ரன்கள் குவிக்க மும்பை அணியின் ஸ்கோர் உயர்ந்து கொணடே இருந்தது .மேலும் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சத்தம் குவித்தனர் . ஒரு கட்டத்தில் அணியின் எண்ணிக்கை 200 தாண்டும் தாண்டும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் மும்பை அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தும் வகையில் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் ஆர்ச்சர் மள மள வென 3 விக்கட்டுகளை வீழ்த்தி மும்பை அணியின் ஆட்டத்தை மாற்றினார்.இதன் மூலம் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 167 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.

இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரஹீனவாம் , திரிபதியும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர் .அதன் பின்னர் ஜோடி சேர்ந்த சாம்சன் மற்றும் ஸ்டோக்ஸ் ஜோடி ரன்களை குவித்தனர் . ஆனால் அவர்களும் ஒரு கட்டத்தில் ஆட்டமிழக்க பின்னர் ஆட்டம் மும்பையின் பக்கம் திரும்பியது . ஆனால் தான் பின்னர் களமிறங்கிய இளம் வீரர் கிருஷ்ணப்பா கெளதம் அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 33 ரன்களை குவித்து ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு காரணமாக ஜொலித்தார்.பின்னர் 2 பந்துகள் மீதம் இருந்த நிலையில் மும்பை அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் அணி .

Advertisement