விராட் கோலியை அலேக்காக தூக்கிய அனுஷ்கா ஷர்மா – இணையத்தில் வைரலாகும் க்யூட் வீடியோ

anushka

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் புரிந்து கொண்டது நாம் அறிந்ததே. திருமணத்திற்கு பிறகும் காதல் ஜோடிகள் ஆகவே உலகம் சுற்றி வந்த இவர்கள் அவ்வப்போது தங்கள் வாழ்க்கையில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை மற்றும் அவர்கள் சந்திக்கும் முக்கிய தருணங்களை சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.

anushka

அந்த வகையில் சமீபத்தில் ஆஸ்திரேலிய தொடரின் போது அவர்களுக்கு அழகிய மகளும் பிறந்தார். அதையும் அவர்கள் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக விராத் கோலி அனுஷ்கா சர்மா தூக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே அகமதாபாத் விமான நிலையத்தில் குழந்தை வந்தவுடன் அனுஷ்கா சர்மா முன்னே செல்ல பின்னால் கோலி அனைத்து லக்கேஜ்களையும் தூக்கி சென்ற புகைப்படம் வைரலானது. அதனைத் தொடர்ந்து இப்போது விளையாட்டாக விராத் கோலியை பின்னாலிருந்து தூக்கும் அனுஷ்கா அந்த வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

ஒருமுறை விராட் கோலியை தூக்கிய பின்னர் அனுஷ்கா சர்மா மீண்டும் விராட்கோலி தன்னை தூக்கச் சொல்லி கேட்கிறார். உடனே மீண்டும் அனுஷ்கா அவரை தூக்குகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆனது மட்டுமின்றி ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

- Advertisement -