தோல்வியில் இருந்து மீளவில்லை…ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மற்றோரு வங்கதேச வீரர் – யார் தெரியுமா?

sownya
- Advertisement -

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவந்தது.

sankar

- Advertisement -

பரபரப்பான இறுதிப்போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணிக்கு வெற்றிபெற 12ரன்கள் தேவை என்ற நிலையில் வங்கதேச அணிவீரர் சௌமியா சர்க்கார் இறுதிஓவரை வீச இந்திய அணியின் தினேஷ் கார்த்திக் 20ஓவரின் கடைசி பந்தில் அடித்த அபாரமான சிக்ஸரால் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

ஒருகட்டத்தில் 2ஓவர்களில் 34ரன்கள் தேவை என்றிருந்த போது 19வது ஓவரை வங்கதேச அணிவீரரான ரூபல் உசேன் வீச அந்த ஓவரில் மட்டும் தினேஷ் கார்த்திக் இரண்டு சிக்ஸர் இரண்டு பவுண்டரிகள் உட்பட 22ரன்களை விளாசினார்.இந்நிலையில் இறுதி ஓவரில் இந்திய அணி 6பந்துகளில் 12ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தான் வங்கதேச அணியின் சௌமியா சர்க்கார் வங்கதேச கேப்டன் சாகிப்-ஹல்-ஹசேனால் பந்துவீச அழைக்கப்பட்டார்.

karthik

இக்கட்டான சூழலில் ஐந்து பந்துகளை சிறப்பாக வீசி அதில் விஜய்சங்கரின் விக்கெட்டையும் வீழ்த்தி இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தார்.இறுதிப்பந்தில் நான்கு ரன்கள் எடுத்தால் சூப்பர் ஓவர், ஐந்து ரன்கள் எடுத்தால் இந்திய அணி வெற்றி என்ற நெருக்கடியான சூழலில் கடைசிப்பந்தை வீச எதிர்முனையில் நின்று ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் அந்த பந்தை சிக்ஸருக்கு விளாச இந்திய அணி திக்திக் சூழலில் வங்கதேசத்தை வென்று கோப்பையை தன்வசப்படுத்தியது.

- Advertisement -

கடைசி இரண்டு ஓவர்கள் தான் வங்கதேசத்திடமிருந்த வெற்றியை இந்தியாவிற்கு பறித்துத்தர காரணமாக இருந்தது.வங்கதேச அணி தோல்வியை தழுவியதும் கடைசி ஓவரை வீசிய சௌமியா சர்க்கார் மைதானத்திலேயே படுத்து அழுதுவிட்டார்.பின்னர் உடைமாற்றிடும் அறைக்கு சென்றும் கதறி அழுதுள்ளார்.ஏற்கனவே இந்த தொடர் முடிந்த பின்னர் வங்கதேச வீரர்கள் இலங்கை வீரர்களிடம் நடந்துகொண்ட விதத்திற்கு மன்னிப்பு கேட்டுவருகின்றனர்.

sharma

இந்நிலையில் 19வது ஓவரில் 22ரன்களை வாரி வழங்கிய ரூபல் உசேனும் வங்கதேச ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.தற்போது அந்த வரிசையில் சௌமியா சர்க்காரும் வங்கதேச ரசிகர்களிடம் தன்னை மன்னித்து விடும்படியும், இன்னும் அந்த தோல்வியிலிருந்து தன்னால் மீளமுடியவில்லை என்றும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும் இதற்கு முன்னர் தான் பலமுறை பந்துவீசியுள்ளதாகவும் ஆனால் இதுபோன்ற இக்கட்டான சூழலில் பந்து வீசியது இதுவே முதல்முறையென்றும், இனிமேல் தன்னால் எந்தவொரு சூழலிலும் சிறப்பாக பந்துவீசிட முடியும் என்ற தன்னம்பிக்கை வலுப்பெற்றுள்ளது என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement