ரோஹித் சர்மா ஆள் பாக்க தான் பல்க்கா இருக்காரு.. ஆனா அவரு விராட்டுக்கு சமம் – உடற்தகுதி நிபுணர் பேட்டி

Rohit-and-Kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் தலைமையின் கீழ் பிட்னஸ் விடயத்தில் பெரும் முன்னேற்றத்தை கண்ட இந்திய கிரிக்கெட் அணியானது நல்ல உடற்தகுதி வாய்ந்த உலகின் நம்பர் ஒன் அணியாக மாறியது. அதன் பிறகு இந்திய அணியில் இடம் பிடிக்கும் வீரர்கள் அனைவருமே ஃபிட்னஸ் விஷயத்தில் மிகவும் கட்டுப்பாட்டோடு இருந்து வருகின்றனர்.

குறிப்பாக கூடுதல் எடை அதிகரிக்காமல் நல்ல உடல் வலிமையை பெற்று களத்தில் வேகமாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே தனியாக பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். அதோடு இந்திய அணியில் பிட்னஸிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அதற்கென ஒரு பயிற்சியாளரையும் அமைத்து தொடர்ச்சியாக வீரர்கள் போட்டிகளில் விளையாடி வரும் போதும் அவர்களுக்கான உடற்தகுதி பயிற்சிகளையும் வழங்கி வருகின்றனர்.

- Advertisement -

குறிப்பாக யோ-யோ டெஸ்ட் தேர்வில் தேர்ச்சி அடையும் வீரர்களே இந்திய அணியில் இடம் பிடிக்கும் அளவிற்கு ஃபிட்னஸ் பெரிய முக்கியத்துவத்தினை பெற்றுள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மா சற்று உடல் பருமனாக இருந்தாலும் அவர் களத்தில் விராட் கோலிக்கு நிகராக செயல்படுகிறார் என பிரபல உடற்தகுதி நிபுணரான அங்கீத் காலியா என்பவர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மா பார்ப்பதற்கு சற்று பருமனாகத்தான் இருக்கிறார். ஆனால் களத்தில் அவருடைய செயல்பாடுகளையும். ஈடுபாடுகளையும் பார்த்தால் அவர் விராட் கோலிக்கு நிகரான எனர்ஜியை பெற்றுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக போட்டிகளுக்கு முன்னர் அவர் மேற்கொள்ளும் பயிற்சிகள் மிகச் சிறப்பாக இருக்கிறது. அதோடு போட்டிகளின் போது எந்த ஒரு இடத்திலும் அவர் கலைப்படைவதில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் அவர் விளையாடும் போது நீங்கள் பார்த்தால் கூட எத்தனை ஓவர்கள் நின்று பேட்டிங் செய்தாலும் நல்ல எனர்ஜியுடன் விளையாடுகிறார். அதேபோன்று மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடினாலும் அவரது எனர்ஜி என்றுமே குறைந்ததில்லை.

இதையும் படிங்க : டி20 உலககோப்பைக்கான அணித்தேர்வு இந்த அடிப்படையில் தான் இருக்கும் – சூரியகுமார் யாதவ் கருத்து

எனவே என்னை பொறுத்தவரை விராட் கோலியின் அளவிற்கு ரோகித் சர்மா பிட்டாக தான் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரண்டு அனுபவ வீரர்களும் தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருவதால் இடையில் சில தொடர்களில் ஓய்வு எடுத்துக் கொண்டாலும் முக்கியமான தொடர்களில் முதன்மை அணியில் இணைந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement