அஸ்வின் இல்லாத பொறுப்பில் நீங்க தான் ஜெயிக்க வைக்கணும்.. இந்திய வீரருக்கு கும்ப்ளே அறிவுரை

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் ராஜ்கோட் நகரில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கிய அந்தத் தொடரில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112, சர்பராஸ் கான் 62 ரன்கள் எடுத்த உதவியுடன் முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு துவக்க வீரர் பென் ஃபோக்ஸ் அதிரடியாக விளையாடி சதமடித்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார். முன்னதாக இந்த போட்டியில் ஜாக் கிராவ்லி விக்கெட்டை எடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார்.

- Advertisement -

அஸ்வின் இல்லை:
இருப்பினும் தன்னுடைய குடும்பத்தில் ஏற்பட்ட அவசர நிலைமை காரணமாக அஸ்வின் பாதியிலேயே இப்போட்டியிலிருந்து விலகியுள்ளது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 500 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின் போன்ற மேட்ச் வின்னர் இல்லாதது இந்த போட்டியில் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

அது போன்ற சூழ்நிலையில் ரவீந்திர ஜடேஜா சுழல் பந்து வீச்சு கூட்டணியை முன்னின்று நடத்தி தன்னுடைய சொந்த ஊரில் இந்தியாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு. “பெரிய நாளில் தேவைப்படும் நேரத்தில் அஸ்வின் போன்ற மேட்ச் வின்னர் இல்லாதது பெரிய பின்னடைவாகும். குறிப்பாக முதல் நாளில் அவர் தன்னுடைய 500வது விக்கெட்டை எடுத்து இங்கிலாந்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியதை நாம் பார்த்தோம்”

- Advertisement -

“தற்போது இந்தியா தங்களுடைய திட்டத்துடன் இங்கிலாந்துக்கு எதிராக வரவேண்டும். ஏனெனில் அவர்கள் நல்ல ரன்கள் அடித்துள்ளனர். அதை உங்களால் நிறுத்த முடியவில்லை. இந்த நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கியமானவர்களாக இருப்பார்கள். ஏனெனில் இங்கே லேசான ரிவர்ஸ் ஸ்விங் இருக்கிறது. அதனால் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் முக்கிய வேலை செய்பவர்களாக இருப்பார்கள்”

இதையும் படிங்க: தற்செயலாக என் வாழ்க்கைல நடந்தது தான் இந்த விஷயம்.. 500 விக்கெட் வீழ்த்திய பிறகு – அஷ்வின் அளித்த பேட்டி

“ஜடேஜா சுழல் பந்து வீச்சு கூட்டணியை முன்னின்று நடத்த வேண்டும். குறிப்பாக தன்னுடைய சொந்த ஊரான ராஜ்கோட்டில் அவர் அசத்த வேண்டும். அவருக்கு தான் இங்குள்ள மைதானத்தை பற்றி மற்ற பவுலர்களை விட நன்றாக தெரியும்” என்று கூறினார். அவர் கூறுவது போல மற்ற பவுலர்களை காட்டிலும் பிறந்து வளர்ந்த தன்னுடைய சொந்த ஊரில் உள்ள மைதானத்தில் ரவீந்திர ஜடேஜா தான் முன்னின்று இந்தியாவை வெற்றி பெற வைக்க வேண்டியது அவசியமாகிறது.

Advertisement