ஆளே இல்லனாலும் பரவாயில்லை. ப்ளீஸ் ஐ.பி.எல் மட்டும் நடத்துக்குங்க கெஞ்சாத குறையாக கூப்பாடு போட்ட – பிரபல வீரர்

Ipl cup

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் டி20 லீக் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக அளவிலும் இந்த தொடருக்கான வரவேற்பு அதிகரித்த காரணத்தினால் ஆண்டுக்காண்டு இத்தொடர் கோலாகலத்துடன் நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் ஒன்றாக விளாயாடுவதனால் இத்தொடரின் மீதுள்ள எதிர்பார்ப்பு ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றே கூறலாம்.

CskvsMi

அதன்படி இந்த ஆண்டு பதிமூன்றாவது சீசனாக நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 28ம் தேதியிலிருந்து இருமுறை தள்ளி வைக்கப்பட்டு தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆனால் இந்த வருடம் ஐபிஎல் தொடரை எப்படியாவது நடத்தியாக வேண்டும் என்ற உன்னிப்பான நோக்கத்தோடு பிசிசிஐ செயல்பட்டு வருகிறது.

மேலும் இவ்வாண்டு இறுதியில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடர் தள்ளிவைக்கப்பட்டால் அந்த நேரத்தில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தத்தொடரினை நடத்திடலாம் என்றும் பி.சி.சி.ஐ திட்டம் வகுத்து வருகிறது. இவ்வாறு இந்த விடயம் குறித்து நாள்தோறும் ஒரு செய்தி வெளியாகி வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான கும்ப்ளே தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

kumbley

தற்போது இந்த ஆண்டு ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் கூறிவந்த நிலையில் அதே கருத்தினை அனில் கும்ப்ளேவும் முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஆமாம் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இன்னும் அதற்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன.

- Advertisement -

அதற்கான அட்டவணையை நாம் மாற்றியே ஆக வேண்டும். மேலும் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்த வேண்டும். ரசிகர்கள் இல்லமால் போட்டி நடக்கும் பட்சத்தில் மூன்று அல்லது நான்கு இடங்களை மட்டும் தேர்வு செய்தால் போதும். அங்கு போட்டிகளை நடத்தினாலே இந்த தொடர் நடைபெறும் வாய்ப்பு உள்ளது என்றார். மேலும் இந்த கருத்துக்கு பின்னால் நிறைய விடயங்கள் உள்ளன.

அவை யாதெனில் திட்டமிட்டபடி இத்தொடர் நடைபெறாமல் போனால் பிசிசிஐக்கு பெருமளவில் நிதி இழப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி வீரர்களுக்கு தரப்படும் சம்பளம் மட்டுமின்றி அணி உரிமையாளர்களும் கடுமையான நஷ்டத்தை அடைவார்கள். எனவே இதை அனைத்தையும் தவிர்க்கும் விதமாக போட்டியை ரசிகர்கள் இல்லாமல் நடத்தினாலும் ஓரளவு சமாளிக்க முடியும் என்பதாலும் இந்த தொடரை நடத்திய ஆக வேண்டும் என்ற முடிவில் பிசிசிஐ இருப்பதாக தெரிகிறது.

கும்ப்ளே கூறிய இதே கருத்தினை இந்திய அணியின் முன்னாள் வீரரான வி.வி.எஸ் லட்சுமணனும் முன் வைத்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெற்றாலும் வீரர்களின் பயணம் மட்டுமே தற்போது சிக்கலான விடயமாக பார்க்கப்படுகின்றது.