- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித், கோலி போதும்.. இந்தியா அந்த உ.கோ ஜெய்க்க புதிய அணியை உருவாங்குங்க.. கம்பீருக்கு கும்ப்ளே அட்வைஸ்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடி வருகிறது. முன்னதாக இந்திய அணி தற்போது அடுத்த தலைமுறையை நோக்கி அடியெடுத்து வைத்து வருகிறது என்றே சொல்லலாம். குறிப்பாக தோனி உருவாக்கிய அல்லது அவரது காலகட்டங்களில் முன்னேற்றத்தை சந்தித்து அசத்திய வீரர்கள் தற்போது வயதால் ஓய்வு பெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக அஸ்வின் சமீபத்தில் ஓய்வு பெற்றார்.

புவனேஸ்வர் குமார், ரஹானே, புஜாரா போன்ற வீரர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி தொடர்ச்சியாக அசத்துவதில் தடுமாறுகிறார்கள். இந்நிலையில் விராட், ரோஹித் போன்ற சீனியர்களை புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கழற்றி விடும் நேரம் வந்துள்ளதாக முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். குறிப்பாக 2027 உலகக் கோப்பைக்கு இளம் அணியை உருவாக்குவதற்கு தேவையான வேலைகளை சாம்பியன்ஸ் டிராபி முடிந்ததும் எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

கும்ப்ளே அறிவுரை:

அப்போது தான் இந்திய அணியின் வருங்காலம் நன்றாக இருக்கும் என்று தெரிவிக்கும் கும்ப்ளே இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஜாம்பவான் வீரர்களிடம் இருந்து இந்திய அணியை மற்ற வீரர்களிடம் மாற்ற பயிற்சியாளராக இது உங்களுக்கு மிகவும் முக்கியமான தொடர் என்று சொல்லலாம். பயிற்சியாளராக அந்த கடினமான முடிவுகளை எடுப்பது உங்களுடைய வேலை”

“இந்தத் தொடர் இந்திய அணியில் மாற்ற வேண்டிய சீனியர் வீரர்களைப் பற்றிய திடமான விஷயங்களை உங்களுக்குக் கொடுக்கும். வெற்றி தோல்வியைத் தாண்டி நீங்கள் கடினமான முடிவுகளை முன்கூட்டியே எடுக்க வேண்டும். 2027 உலகக் கோப்பையை முன்னிட்டு நீங்கள் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நம்முடைய அணி வருங்காலத்தை பார்க்க வேண்டும்”

- Advertisement -

வருங்காலம் முக்கியம்:

“எந்த உலகக் கோப்பையாக இருந்தாலும் அதில் விளையாடுவதற்கு நீங்கள் 20 – 25 போட்டிகளில் ஒன்றாக விளையாடக்கூடிய வீரர்களை வைத்து அணியை உருவாக்க வேண்டும். அப்போது தான் உங்களுடைய பல்வேறு சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ள முடியும். பொதுவாகவே நீங்கள் அடுத்த உலகக் கோப்பையை பார்த்து தான் செயல்களை செய்ய வேண்டும்”

இதையும் படிங்க:இந்தியாவை பாகிஸ்தான் ஜெயிச்சா தான் எனக்கு ஆச்சர்யம்.. இந்த காரணத்தால் இம்முறை டிவி உடையாது.. பசித் அலி

“அதில் சீனியர்கள் விளையாடுவார்களா? அல்லது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாமா? என்பது போன்ற கேள்விகளை கம்பீர் அணுக வேண்டும். அவருக்கு நிறைய திறமையான இளம் வீரர்கள் இருக்கிறார்கள். எனவே 2027 உலகக் கோப்பைக்கு அவர் இயற்கையாக நல்ல அணியை உருவாக்க வேண்டும். டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் கேப்டனாக இருக்கிறார். ஆனால் அடுத்த ஒருநாள் உலகக்கோப்பைக்கு 2 வருடம் இருப்பதால் நீங்கள் இப்போதிலிருந்தே பேட்டிங் வரிசை, திட்டங்கள் போன்ற பல்வேறு விஷயங்களை வலுக்க வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -