இப்படி அடம் பிடித்தால் என்னைக்கும் ஜெய்க்க முடியாது – இந்திய பேட்ஸ்மேன்களை விளாசும் அனில் கும்ப்ளே

Kumble
- Advertisement -

வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலக கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. இந்த தொடரில் சூப்பர் 12 சுற்றில் சிறப்பாக செயல்பட்டு 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா வழக்கம் போல இங்கிலாந்துக்கு எதிரான அழுத்தமான நாக் அவுட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி சந்தித்தது.

ENg vs IND Jos Buttler Alex hales

- Advertisement -

அதிலும் 169 ரன்களை துரத்திய இங்கிலாந்தின் 1 விக்கெட்டை கூட எடுக்காமல் கொஞ்சமும் போராடாமல் இந்தியா தோற்றதே ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அந்த போட்டியில் மோசமான பவுலிங் மற்றும் ரோகித் சர்மா – கேஎல் ராகுல் ஆகியோர் அடங்கிய ஓப்பனிங் ஜோடியின் படுமோசமான ஆட்டமே தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதே போல் பந்து வீச்சு துறையில் கடைசி நேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறிய பொறுப்புடன் செயல்பட வேண்டிய புவனேஸ்வர் குமார், முகமது ஷமி ஆகிய சீனியர் பவுலர்கள் அழுத்தமான செமி ஃபைனலில் படுமோசமாக பந்து வீசினார்கள்.

அடம் பிடிக்காதிங்க:

அத்துடன் சுழல் பந்து வீச்சுத் துறையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அக்ஸர் பட்டேல் ஆகியோரும் சொதப்பலாகவே செயல்பட்டார்கள். மொத்தத்தில் முக்கிய வீரர்களின் சொதப்பலான செயல்பாடுகளால் 2013க்குப்பின் ஒரு ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கனவு மீண்டும் சுக்கு நூறாக உடைந்து போனது. இந்நிலையில் இந்திய அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் ஒரு ஓவர் கூட பந்து வீச மாட்டோம் என்ற வகையில் அடம் பிடிப்பதே தோல்விக்கு காரணமென்று முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

IND vs RSA MIller Rahul Rohit Suryakumar

ஒரு கட்டத்தில் சச்சின், சேவாக், கங்குலி, யுவராஜ், ரெய்னா என டாப் பேட்ஸ்மேன்கள் முதன்மை பவுலர்கள் தடுமாறும் போது பகுதி நேர பவுலர்களாக எதிரணிகளை திணறடித்து வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்கள். அந்த நிலைமை தற்போது இங்கிலாந்து போன்ற கிரிக்கெட் அணிகளில் இருக்கும் நிலையில் இந்திய அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை மட்டுமே செய்வோம் என்ற வகையில் செயல்படுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நிச்சயமாக தோல்விக்கு பின் செய்ய வேண்டிய ஒன்றாக நான் பார்ப்பது என்னவெனில் பந்து வீச்சாளர்கள் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை பற்றி நாம் தொடர்ந்து பேசுகிறோமோ அதே போல் இந்திய அணியின் சமநிலைக்கு பேட்ஸ்மேன்களும் பந்து வீச வேண்டும் என்று நினைக்கிறேன். அது தான் இங்கிலாந்திடம் உள்ளது. அவர்களது அணியில் லியம் லிவிங்ஸ்டன், மொய்ன் அலி போன்ற பேட்ஸ்மேன்களும் பந்து வீசுகிறார்கள். அது போன்ற தேர்வுகள் இந்திய அணிக்கும் தேவைப்படுகிறது”

kumbley

“ஆனால் துரதிஷ்டவசமாக இந்திய ஏ அணியில் கூட பேட்ஸ்மேன்கள் யாரும் பந்து வீசுவதில்லை. எனவே இந்திய கிரிக்கெட்டில் அது போன்ற ஒரு ப்ராண்டை மீண்டும் உருவாக்கி முக்கியத்துவம் கொடுத்து பின்பற்ற வேண்டும். டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து வெற்றிகரமாக விளையாட நீங்கள் உங்களது அதிரடியான பவரை காண்பிக்க வேண்டும். மேலும் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட பயன்படுத்தாத சில யுக்திகளை சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா பயன்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ரிசப் பண்ட் 6வது இடத்தில் 19வது ஓவரில் களமிறங்கினார். ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட அவர் அந்த சூழ்நிலையில் களமிறங்கியதில்லை”

“எனவே ஒவ்வொரு வீரருக்கும் என்ன வேலை கொடுக்க வேண்டும் என்பதில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு வீரருக்கும் சரியான பேக் அப் வீரர்களை முன்கூட்டியே உருவாக்குவது அவசியமாகும். ஏனெனில் உங்களது 6 சிறந்த வீரர்கள் மட்டுமே உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட வார்கள் என்று எதிர்பார்ப்பது கடினம் என்று நினைக்கிறேன்” என கூறினார்.

Advertisement