- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இப்படி பேசியே டீம கெடுத்த டிராவிட் பேச்சை கேட்காம முதலில் அந்த முடிவை எடுங்க – பிசிசிஐக்கு அனில் கும்ப்ளே முக்கிய கோரிக்கை

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இத்தனைக்கும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் தரவரிசையில் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக திகழும் இந்தியா லீக் சுற்றில் தேவையான வெற்றிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றாலும் வழக்கம் போல அழுத்தமான நாக் அவுட் போட்டியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு வேதனையாக அமைந்துள்ளது.

மேலும் இந்த தொடரில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ், அர்ஷிதீப் சிங் ஆகிய ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலான நட்சத்திரங்கள் சுமாராக செயல்பட்டதால் இளம் வீரர்களை தேர்வு செய்யுமாறு கோரிக்கைகள் குவிந்து வருகின்றன. அதே போல் சோதனை முயற்சி என்ற பெயரில் தொடர்ந்து மாற்றங்களை செய்து வந்த ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் ஆகியோருக்கு பதிலாக குறைந்தபட்சம் டி20 கிரிக்கெட்டில் புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன. முன்னதாக ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் இந்தியாவை செமி ஃபைனலில் தோற்கடிக்க உதவியதாக இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் வெளிப்படையாக பேசியது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

- Advertisement -

கும்ப்ளே கோரிக்கை:

அதனால் ஏற்கனவே இந்திய வீரர்களும் பணத்துக்காக முன்னுரிமை கொடுக்கும் ஐபிஎல் தொடரை தடை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் குமுறுகின்றனர். இருப்பினும் உண்மை என்னவெனில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடி வெளிநாட்டு வீரர்கள் அனுபவத்தைப் பெற்றுக் கொண்டு இந்தியாவை சாய்க்கிறார்கள். ஆனால் வெளிநாட்டு தொடர்களில் விளையாடும் வாய்ப்பை பெறாத காரணத்தால் அங்குள்ள கால சூழ்நிலைகளை தெரிந்து கொள்ள முடியாத இந்திய வீரர்கள் வெளிநாட்டில் நடைபெறும் ஐசிசி தொடர்களில் சொதப்புகிறார்கள்.

இதனால் பிக்பேஷ் போன்ற வெளிநாட்டு தொடர்களில் இந்திய வீரர்களை அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கைகளும் பிசிசிஐயிடம் வைக்கப்படுகிறது. ஆனால் வெளிநாட்டு தொடர்களில் இந்திய வீரர்களை விளையாட அனுமதித்தால் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடர்களின் தரம் குறைந்துவிடும் என உலகக் கோப்பை தோல்விக்கு பின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் ராகுல் டிராவிட் பேச்சைக் கேட்காமல் வெளிநாடுகளில் இந்திய வீரர்களை அனுமதிக்க வேண்டும் என்று ஜாம்பவான் அனில் கும்ப்ளே கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“வெளிப்பாடு நிச்சயமாக உதவும் என்று நான் நினைக்கிறேன். அதனால் இந்திய கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை நாங்கள் பார்த்திருக்கிறோம். எடுத்துக்காட்டாக ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் வந்து விளையாடுவது இந்திய கிரிக்கெட்டில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்த உதவியது. அந்த வகையில் வெளிநாட்டு தொடர்களில் இளம் இந்திய வீரர்களுக்கு ஏன் அனுமதியளிக்க கூடாது? குறிப்பாக 2024 உலகக் கோப்பைக்கு முன்பாக அனைத்து முயற்சிகளையும் நீங்கள் செய்து தேவையான அனுபவத்தை உருவாக்குவது முக்கியமென்று நினைக்கிறேன். அது நடக்கும் பட்சத்தில 2024 உலகக் கோப்பையில் விளையாட நீங்கள் முழுமையாக தயாராக இருப்பீர்கள்”

“அத்துடன் நமது அணியில் பேட்டிங் அல்லது பவுலிங் என எந்த துறையாக இருந்தாலும் அதில் வளைவுத்தன்மை வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் எப்போதுமே டி20 கிரிக்கெட்டில் மட்டும் தீர்மானிக்கப்பட்ட பேட்டிங் வரிசை செல்லுபடியாகாது என்று நான் நம்புகிறேன். அங்கே சூழ்நிலைக்கு ஏற்றவாறு உங்களிடம் இருக்கும் திறமையில் மாற்றங்களை செய்து விளையாட வேண்டும். அதே போல் நாங்கள் பார்க்கும் கிரிக்கெட்டின் ப்ராண்டை நீங்கள் அடையாளம் கண்டு அந்த வெளிப்பாடுகள் தேவையென்று நீங்கள் நம்பும் இந்த முக்கிய இளம் வீரர்களை அடையாளம் காண வெளிநாட்டு தொடர்கள் உதவினால் அதில் ஏன் நமது வீரர்களை அனுமதிக்க கூடாது? எனவே அது முக்கியமானது என்று நான் கருதுகிறேன்” என கூறினார்.

- Advertisement -