இதெல்லாம் நியாயமா? அந்த 2 பேர் நிலைமையை நினச்சு பாருங்க.. ஐபிஎல் அணிகள் மீது கும்ப்ளே அதிருப்தி

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் துபாயில் நடைபெற்று முடிந்தது. அதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர வீரர்கள் மிட்சேல் ஸ்டார்க் 24.75 கோடிக்கும் பட் கமின்ஸ் 20.50 கோடிக்கும் முறையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டது ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஏனெனில் இவர்கள் சமீப காலங்களாகவே நாட்டுக்காக விளையாடுவதற்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்து வந்தார்கள். அதை விட காலம் காலமாக 200 போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவத்தை கொண்ட நட்சத்திர இந்திய ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி ஆகியோர் கூட 16 கோடிக்கும் குறைவான சம்பளத்திற்காக விளையாடி வருகிறார்கள்.

- Advertisement -

கும்ப்ளே அதிருப்தி:
மறுபுறம் இந்த 2 வெளிநாட்டு வீரர்களும் 50 ஐபிஎல் போட்டிகளில் கூட விளையாடிய கொண்டிருக்கவில்லை. அப்படிப்பட்ட அவர்களை ஐபிஎல் அணி நிர்வாகங்கள் இப்படி கண்மூடித்தனமாக கோடிகளை கொட்டிக் கொடுத்து வாங்கியது சில முன்னாள் இந்திய வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் டி20 முதல் டெஸ்ட் வரை அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்தக்கூடிய பும்ரா மற்றும் விராட் கோலி ஆகியோர் 15 கோடிக்கும் குறைவான தொகையில் விளையாடி வரும் நிலையில் ஆஸ்திரேலிய வீரர்களை இவ்வளவு கோடிகள் கொடுத்து வாங்கியது நியாயமானதல்ல என்று ஜாம்பவான் அனில் கும்ப்ளே அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக பும்ராவை விட சுமாரான ஃபார்மில் மிட்சேல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி நிர்வாகம் 25 கோடிகள் கொடுத்து வாங்கியது ஏமாற்றமளிப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர்களை வாங்கிய அணிகளுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் ஐபிஎல் அணி நிர்வாகங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கு கொடுக்கும் சம்பளத்திற்கு வரைமுறை வைத்துக் கொள்ள வேண்டும். 20 கோடி என்பது பைத்தியக்காரத்தனமான தொகையாகும். அவர்கள் தரமான வீரர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் மிட்சேல் ஸ்டார்க் 25 கோடிக்கு வாங்கப்பட்டார் என்பது ஆச்சரியம் என்றே சொல்வேன்”

இதையும் படிங்க: ஓட்டைய யூஸ் பண்றாங்க.. ரூல்ஸை மாத்த என்னோட 2 ஐடியாவை ஃபாலோ பண்ணுங்க.. பிசிசிஐக்கு டிகே கோரிக்கை

“ஏனெனில் இங்கே பும்ரா இருக்கிறார் அல்லவா? அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்தக்கூடிய பவுலர். ஆனால் ஏற்கனவே ஒரு அணியில் இருப்பதன் காரணமாக அவர் இந்த ஏலத்தில் பங்கேற்று கோடிகளை அள்ளும் வாய்ப்பை இழந்துள்ளார். மறுபுறம் ஸ்டார்க் டி20 கிரிக்கெட்டில் பெரிய ஃபார்ம் இல்லாதவர். இந்த சூழ்நிலையில் விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோர் ஏலத்தில் என்ன நடக்கிறது என்பதை ஆதங்கத்துடன் பார்ப்பார்கள் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது” என்று கூறினார்.

Advertisement