ஓட்டைய யூஸ் பண்றாங்க.. ரூல்ஸை மாத்த என்னோட 2 ஐடியாவை ஃபாலோ பண்ணுங்க.. பிசிசிஐக்கு டிகே கோரிக்கை

Dinesh Karthik
- Advertisement -

துபாயில் பரபரப்பாக நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர வீரர்கள் மிட்சேல் ஸ்டார்க் 24.75, பட் கமின்ஸ் 20.50 கோடிகளுக்கு முறையே கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிக்காக வாங்கப்பட்டார்கள். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றின் ஏலத்தில் 20 கோடிக்கு வாங்கப்பட்ட முதல் வீரர் மற்றும் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் ஆகிய சாதனைகளை அவர்கள் படைத்தனர்.

இருப்பினும் இந்திய ஜாம்பவான்களான தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை கொண்டிந்தும் 15க்கும் குறைவான கோடிகளுக்காக விளையாடி வருகின்றனர். ஆனால் சமீப காலங்களாக நாட்டுக்காக குப்பையை போல் ஐபிஎல் தொடரை புறக்கணித்து வந்த இந்த 2 வெளிநாட்டு வீரர்கள் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

பிசிசிஐக்கு கோரிக்கை:
இந்நிலையில் மெகா ஏலத்தில் பங்கேற்றால் குறைந்த தொகைக்கு செல்வோம் என்பதை அறிந்து வெளிநாட்டு வீரர்கள் மினி ஏலத்தில் பங்கேற்று பெரிய தொகைக்கு வாங்கப்படுவதற்கான குறியை வைப்பதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். எனவே வரும் காலங்களில் இது போல் நடைபெறும் மினி ஏலங்களில் வெளிநாட்டு வீரர்களின் சம்பளத்திற்கு வரைமுறை செய்யப்பட வேண்டும் என்று பிசிசிஐக்கு கோரிக்கை வைக்கும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

“வெளிநாட்டு வீரர்களும் அவர்களுடைய ஏஜெண்டுகளும் ஒவ்வொரு 3 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் மெகா ஏலத்திற்கு பதிலாக இது போல் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் மினி ஏலத்தில் பங்கேற்பதை திட்டமாக வைத்துள்ளார்கள். ஏனெனில் இதில் சில ஓட்டைகள் இருக்கிறது. அதை பயன்படுத்தி வீரர்களின் ஏலம் தாறுமாறாக செல்கிறது. இதற்கு என்னிடம் 2 தீர்வுகள் இருக்கிறது”

- Advertisement -

“முதலாவதாக மெகா ஏலத்திற்கு பின் விடுவிக்கப்படும் வீரர்களுக்கு முந்தைய சம்பளத் தொகையை மினி ஏலத்தின் உச்சகட்ட விலையாக வைக்கலாம். 2வதாக ஒரு வீரர் நேரடியாக மினி ஏலத்தில் பங்கேற்கும் போது அவரை வாங்க முயற்சிக்கும் அணியில் ஏற்கனவே அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரரின் சம்பளமே அவருடைய உச்சகட்ட சம்பளமாக இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 : ஏலத்துக்கு பின் புதிய வீரர்களை கொண்ட.. சென்னை அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ

“அதைத் தாண்டி அவர் ஏலம் சென்றால் மீதி பணத்தை பிசிசிஐயிடம் கொடுக்க வேண்டும். இப்படி சொல்வது சற்று நியாயமற்றது என்றாலும் வெளிநாட்டு வீரர்கள் ஓட்டைகளை பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு இதுவே வழியாகும்” என்று கூறினார். அவர் கூறுவது போல மினி ஏலத்தில் ஒரு அணி 6 – 7 வீரர்களை மட்டுமே வாங்க வேண்டிய சூழ்நிலையில் களமிறங்குகிறது. அதனால் ஓரிரு வீரர்களை 15 – 20 கோடிகள் வாங்குவதற்கு அணி நிர்வாகங்கள் தயாராக இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு வெளிநாட்டு வீரர்கள் அதில் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

Advertisement