ஐபிஎல் 2024 : ஏலத்துக்கு பின் புதிய வீரர்களை கொண்ட.. சென்னை அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் துபாயில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அதில் எம்எஸ் தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் நியூசிலாந்தைச் சேர்ந்த டார்ல் மிட்சேல், ரச்சின் ரவீந்திரா ஆகியோரை 14, 1.8 ஆகியோரை கோடிகளுக்கு வாங்கியது ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

அதே போல ஷார்துல் தாக்கூரை மீண்டும் வாங்கிய அந்த அணி நிர்வாகம் அமீர் ரிஸ்வி, அவினாஷ் ராவ் ஆகிய 2 இளம் வீரர்களையும் வாங்கியது. இதைத்தொடர்ந்து 2024 சீசனில் சிறப்பாக விளையாடி கோப்பையை தக்க வைக்கக்கூடிய திறமை மிகுந்த 11 பேர் கொண்ட புதிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

- Advertisement -

பிளேயிங் லெவன்:
பொதுவாக பிளேயிங் லெவனில் மாற்றங்களை செய்ய விரும்பாத சென்னை அணியில் ரச்சின் ரவீந்திரா உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடினாலும் 2023 ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய டேவோன் கான்வே அனுபவத்தின் காரணமாக மீண்டும் துவக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. அவருடன் 2021, 2023 கோப்பைகளை வெல்ல உதவிய வருங்கால நம்பிக்கை நட்சத்திரம் ருதுராஜ் கைக்வாட் மற்றொரு துவக்க வீரராக களமிறங்குவார்.

3வது இடத்தில் கடந்த வருடம் அபாரமாக விளையாடிய ரகானே மீண்டும் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் 4வது இடத்தில் ஓய்வு பெற்ற ராயுடுவின் இடத்தை நிரப்புவதற்காகவே 14 கோடிக்கு டார்ல் மிட்சேலை சென்னை வாங்கியிருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் பந்து வீச்சில் சில ஓவர்களை அவர் வீசுவார் என்பது வரப்பிரசாதமாக பார்க்கப்படும் நிலையில் 5, 6வது இடங்களில் ஆல் ரவுண்டர்களான சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் களமிறக்கப்படுவார்கள் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

அதைத் தொடர்ந்து 7வதாக கேப்டன் தோனி விக்கெட் கீப்பராக செயல்படுவார். 8, 9வது இடங்களில் சர்துள் தாகூர், தீபக் சஹர் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக களமிறங்குவார்கள். 2018, 2021 சீசன்களில் சென்னை கோப்பைகளை வெல்ல முக்கிய பங்காற்றிய இவர்கள் பேட்டிங்கில் சற்று கணிசமான ரன்களை அதிரடியாக எடுக்கக்கூடிய திறமை கொண்டவர்கள்.

3வது வேகப்பந்து வீச்சாளராக விளையாட பதிரனா அல்லது புதிதாக வாங்கப்பட்ட வங்கதேசத்தின் ரஹ்மான் ஆகியோருக்கு வாய்ப்புள்ளது. அதே சமயம் ஸ்பின்னராக கடந்த சீசன்களில் அசத்திய இலங்கையின் மஹீஸ் தீக்சனா மீண்டும் விளையாடுவார் என்று நம்பலாம். இது போக இம்பேக்ட் பிளேயர் விதிமுறையை பயன்படுத்தி பதிரனா/ரஹ்மானுக்கு பதில் பேட்டிங்கில் ரச்சின் ரவீந்தராவையும் சென்னை பயன்படுத்த வாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 : ஏலத்துக்கு பின் புதிய வீரர்களை கொண்ட.. சென்னை அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ

ஐபிஎல் 2024 தொடருக்கான உத்தேச சென்னை பிளேயிங் லெவன்: டேவோன் கான்வே, ருதுராஜ் கைக்வாட், அஜிங்க்ய ரகானே, டார்ல் மிட்சேல்*, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் – கீப்பர்), ஷார்துல் தாகூர், தீபக் சஹர், மஹீஸ் தீக்சனா*, மதீஸா பதிரனா/முஸ்தபிசுர் ரஹ்மான்*

Advertisement