உண்மைய சொல்லனும்னா அந்த முடிவை நாங்க எடுக்கமுடியாது.. தல தோனி கிட்ட தான் இருக்கு – காசி விஸ்வநாதன் பேட்டி

Kasi-and-Dhoni
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஐந்து கோப்பைகளுடன் முதலிடத்தில் உள்ளன. இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர் என்றால் அது மிகையல்ல. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் எண்ணிக்கையை கொண்ட ஒரு பெரிய அணியாக சிஎஸ்கே அணி பார்க்கப்பட்டு வருகிறது.

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இதுவரை ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இன்றளவும் தோனி சென்னை அணியின் பெரிய அடையாளமாக பார்க்கப்பட்டு வருகிறார். தொடர்ச்சியாக சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனிக்கு அடுத்து சென்னை அணியின் வருங்கால கேப்டன் யார்? என்ற கேள்வி தற்போது அனைவது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் தற்போது 42 வயதாகும் தோனி நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணி சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு ஓய்வினை அறிவிப்பார் என்று பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களின் அன்பிற்காகவும், பாசத்திற்காகவும் 2024 ஐ.பி.எல் தொடரில் விளையாட விருப்பப்படுவதாக அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரோடு அவர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தோனியின் ஓய்விற்குப் பிறகு அடுத்த கேப்டனாக யாரை அறிவிக்கப்போகிறார்கள்? என்ற கேள்வியும், தோனியின் ஓய்வு எப்போது? என்கிற கேள்வியும் அதிகளவு எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரியான காசி விஸ்வநாதன் அதற்கு தெளிவான பதில் ஒன்றினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : என்னம்மா இப்படி பண்ணிடீங்களேம்மா.. ஐ.பி.எல் ஏலத்தில் காவ்யா மாறன் செய்த தவறை – சுட்டிக்காட்டும் ரசிகர்கள்

எங்களது அணியின் முக்கிய முடிவுகள் அனைத்தையும் தோனி தான் எடுப்பார். இதுவரை தோனி எங்களிடம் அவரது ஓய்வு குறித்து எதுவும் சொல்லவில்லை. அவருடைய ஓய்வு அவருடைய கையில் தான் உள்ளது. அவர் எடுப்பதே இறுதியான முடிவு. அதேபோன்று சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார்? என்பதையும் அவர்தான் முடிவு செய்வார். அவர் சொல்வதைத்தான் நாங்கள் செய்வோம் என்று காசி விஸ்வநாதன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement