நாங்க ரெடியா இருந்தோம். ஆனா க்றிஸ் கெயிலுக்கு வாய்பளிக்காதது ஏன் ? – கோச் கும்ப்ளே விளக்கம்

Kumble
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 22 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

kxip

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பேர்ஸ்டோ 97 ரன்களையும், வார்னர் 52 ரன்களும் குவித்தனர். அதன் பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 37 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். இதனால் பஞ்சாப் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி பஞ்சாப் அணிக்கு ஐந்தாவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியில் அதிரடி வீரரான கெயில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நேற்றைய போட்டியிலும் விளையாடவில்லை.

ஆனால் இந்த விடயம் தற்போது இணையத்தில் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் தொடர்ந்து பஞ்சாப் அணிகள் சொதப்பி வரும் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக கெயிலுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து இருந்தனர். ஆனாலும் நேற்றைய போட்டியில் கெயில் விளையாடவில்லை. மோசமான பார்மில் இருக்கும் மேக்ஸ்வெல் விளையாடினார்.

- Advertisement -

Maxwell

ஆனால் நேற்றைய போட்டியிலும் 12 பந்துகளை சந்தித்து 7 ரன்களை மட்டுமே அடித்தார். அதனால் மேலும் ரசிகர்கள் தங்கள் கோபத்தை சமூக வலைதளத்தின் மூலம் கேள்விகளாக எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் நேற்று கெயில் போட்டியில் கலந்து கொள்ளாததற்கு காரணம் என்னவென்று அணியின் தலைமை பயிற்சியாளர் கும்ப்ளே தெளிவுபடுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Gayle

நேற்றைய போட்டியில் கிறிஸ் கெயிலுக்கு இடம் கொடுக்க நாங்கள் திட்டமிட்டு இருந்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. புட் பாய்சன் காரணமாகவே நேற்றைய போட்டியில் அவரால் விளையாட முடியவில்லை. மற்றபடி அவருக்கு நாங்கள் வாய்ப்பு அளிக்க தயாராக இருந்ததாக கும்ப்ளே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement