ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர இளம் துவக்க ஆட்டக்காரரான வைபவ சூர்யவன்ஷி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் வியக்க வைத்து வருகிறார். குறிப்பாக 15 வயதாகும் அவர் உலகின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பலருக்கு எதிராகவும் ஆதிக்கம் செலுத்தி வெகு எளிதாக சிக்சர்களை விளாசுவது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
கெயிலின் சாதனையை நிச்சயம் சூர்யவன்ஷி முறியடிப்பார் – அணில் கும்ப்ளே
நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியிலும் 93 ரன்கள் அடித்து அனைவரையும் வியக்க வைத்திருந்தார். பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமெனில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 221 ரன்கள் என்கிற மிகப்பெரிய இலக்கினை துரத்துகையில் :
துவக்க வீரராக களமிறங்கிய அவர் 38 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர் என 93 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இந்த இன்னிங்ஸின் மூலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய அவர் நடப்பு தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராகவும் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியிருந்தார். இந்நிலையில் வைபவ் ஒரு ஸ்பெஷல் டேலன்ட் உடைய வீரர் என்றும் அவர் நிச்சயம் கிரிஸ் கெயிலின் சாதனையை முறியடிப்பார் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான அணில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : வெகு சில வீரர்களால் மட்டுமே கவர் திசையில் பெரிய சிக்ஸர்களை அடிக்க முடியும். அதனை வைபவ் சூர்யவன்சி எளிதாக பலமுறை செய்து காட்டியுள்ளார். அவரிடம் இருக்கும் திறமை என்பது மிகவும் அரிதான ஒன்று. அதனால் அவர் ஒரு ஸ்பெஷல் டேலண்ட் என்று கூறுவேன்.
இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் – காரணம் என்ன?
இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் முதல் இந்திய வீரராக வைபவ் சூர்யவன்ஷி 50 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அவர் நிச்சயம் கிறிஸ் கெயிலின் 59 சிக்ஸர்கள் சாதனை தகர்ப்பார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. அவர் தற்போது தான் அவருடைய கரியரை துவங்கியுள்ளார். இன்னும் பல்வேறு சாதனைகளை அவர் நிகழ்த்தவும் வாய்ப்புள்ளது என அனில் கும்ப்ளே பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



