இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்விரு தொடர்களுக்குமான இந்திய அணியை நேற்று இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் :
அந்த வகையில் வெளியான அறிவிப்பில் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் அனுபவ வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அவர்கள் விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த வேளையில் இந்த தொடரில் அவர்களுக்கு இடம் வழங்கப்பட்டது பலரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ஒருநாள் தொடரை பொறுத்தவரை விராட் கோலி எந்த ஒரு சிரமமும் இன்றி விளையாடுவார் என்றும் ஆனால் ரோகித் சர்மா இந்த தொடரில் விளையாடுவது சந்தேகம் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் வெளியான தகவலின் படி :
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி 2026 ஐ.பி.எல் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் வேளையில் இந்த தொடரின் பெரும்பாலான போட்டிகளில் ரோஹித் சர்மா காயம் காரணமாக விளையாடவில்லை. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரிலும் அவருக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்று தெரிகிறது. ஏனெனில் முழு உடற்தகுதியை எட்டாமல் அவரை போட்டியில் விளையாட வைக்க முயற்சித்தால் அது அவருக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : 6 ஆவது இந்திய அன் கேப்டு வீரராக வைபவ் சூர்யவன்ஷி நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ
எனவே முன்னெச்சரிக்கை காரணமாக அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே இரட்டை சதம் அடித்த இஷன் கிஷனை துவக்க வீரராக சுப்மன் கில்லுடன் களமிறக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



