பொல்லார்டோட வேகம் அப்படியே இவரிடம் இருக்கு. இவர்தான் அடுத்த பொல்லார்டு – அணில் கும்ப்ளே ஓபன்டாக்

kumble

இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் 9 (ஒன்பதாம் தேதி) முதல் மே மாதம் 30-ஆம் தேதி வரை மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற உள்ளன. 14 ஆவது சீசனாக நடைபெறும் இந்த தொடர் இந்தியாவில் 6 மைதானங்களில் மட்டுமே நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இந்த தொடர் குறித்தும் ,இந்த தொடரில் வீரர்களின் செயல்பாடு குறித்தும் பல்வேறு அணியின் பயிற்சியாளர், நிர்வாகிகள், பிரபலங்கள் என பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

kxip

இந்நிலையில் தற்போது பஞ்சாப் அணியின் பயிற்சியாளரான கும்ப்ளே பஞ்சாப் அந்த அணியின் வீரர் குறித்து தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : மும்பை அணியில் பொல்லார்ட்டின் ஆட்டத்தை நான் அருகில் இருந்து பார்த்து இருக்கிறேன். நான் மும்பை அணியில் பயிற்சியாளராக இருந்தபோது அவருக்கு வலை பயிற்சியின்போது பந்துவீசி இருக்கிறேன். அப்போது பொல்லார்ட் பலமாக அடிப்பதனால் எனக்கு நேராக பந்தை அடிக்காதீர்கள் என்று கூறியிருக்கிறேன்.

அந்த அளவிற்கு அவர் வேகமாக பேட்டை சுழற்றக்கூடிய வீரர். பொல்லார்ட்டின் பேட்டிங்கில் அப்படி ஒரு அசுர பலம் இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இப்போது எனக்கு வயதாகி விட்டது அதனால் நீண்ட நேரம் நான் வலைப்பயிற்சியில் பந்து வீச முடியாது. வலை பயிற்சியின்போது பொல்லார்டுக்கு பந்துவீசிய நான் அதன் பிறகு தற்போது ஷாருக்கானுக்கு எதிராக பந்து வீச மாட்டேன்.

Sharukh

ஏனெனில் பொல்லார்ட்டை போலவே அவரும் அதிவேகமாக மட்டையை சுழற்றுகிறார் என்று கூறியுள்ளார். மேலும் ஷாருக்கான் நிச்சயம் பஞ்சாப் அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் பொல்லார்ட் போன்று மிகப் பெரிய ஒரு பவர் ஹிட்டர் ஆக மாறுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

sharukh 1

தமிழக வீரரான ஷாருக்கான் பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் 5.25 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரிலும் தமிழ்நாடு அணி கோப்பையை வெல்ல மிக முக்கியமான காரணமாக அவர் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.