- Advertisement -
ஐ.பி.எல்

கோபத்தை அதுல காட்டுங்க.. நேரலையில் ஜாம்பவான் ஜஹீர் கானிடம் வாதிட்ட ரிஷப் பண்ட்டை சாடிய கும்ப்ளே

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 40வது லீக் போட்டியில் டெல்லி அணி லக்னோவை அதனுடைய சொந்த மண்ணில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 20 ஓவரில் 159 ரன்கள் குவித்தது. ஆனால் அதை டெல்லி 17. 5 ஓவரிலேயே எடுத்து எளிதாக தங்களுடைய 6வது வெற்றியை பெற்றது.

முன்னதாக அந்தப் போட்டியில் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் 7வது இடத்தில் களமிறங்கி டக் அவுட்டானது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்த வருடம் 27 கோடி என்ற பெரிய தொகைக்கு லக்னோ அணிக்காக விளையாடி வரும் அவர் இதற்கு முந்தைய போட்டிகளில் மிடில் ஆர்டரில் விளையாடி பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் அவர் வழக்கத்துக்கு மாறாக 7வது இடத்தில் களமிறங்கினார்.

- Advertisement -

ஜாம்பவானுடன் வாதம்:

அந்த வாய்ப்பில் 2 பந்துகளை எதிர்கொண்ட அவர் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சித்து கிளீன் போல்ட்டானார். அதற்கு முன்பாக 18வது ஓவரில் பெவிலியினில் அமர்ந்திருந்த லக்னோ அணியின் ஆலோசகர் மற்றும் ஜாம்பவான் ஜஹீர் கானிடம் அவர் காரசாரமாக வாதிட்டார். என்னை முன்கூட்டியே களமிறங்கிய ஏன் தடுத்து இப்படி கீழே விளையாட வைக்கிறீர்கள்? என்ற வகையில் ரிஷப் பண்ட் கூறியிருக்கலாம் என்பது அந்தக் காட்சியை பார்த்த போது தெரிந்தது.

அதை நேரலையில் பார்த்த ஜாம்பவான் அனில் கும்ப்ளே பேட்டிங்கில் ரிசப் பண்ட் மேலே களமிறங்க விரும்பியதாக தெரிவித்தார். ஆனால் லக்னோ அணி நிர்வாகம் தான் அவரை வேண்டுமென்றே கீழே விளையாட வைத்ததாகவும் கும்ப்ளே விளக்கினார். அதே சமயம் நிலைமை எதுவாக இருந்தாலும் ரிஷப் பண்ட் இப்படி ஆலோசகரிடம் பொதுவெளியில் வாதிடக்கூடாது என்று சாடிய கும்ப்ளே இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கும்ப்ளே சாடல்:

“அது நீங்கள் தாமதமாக வந்து அழுத்தம் இல்லாமல் சுதந்திரமாக விளையாட விரும்பினால் பரவாயில்லை. ஆனால் இது மிகவும் தாமதமானது. இங்கே ரிஷப் பண்ட் காட்டும் அதிருப்தி அவர் தவறான இடத்தில் களமிறங்கக் காத்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. அவர் மேலே பேட்டிங் செய்ய விரும்பியிருக்கலாம். இது அவருடைய முடிவா? அல்லது பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்?”

இதையும் படிங்க: அவங்க 3 பேருக்கும் என்ன குறை? அவங்கள ஏன் டீம்ல எடுக்கல.. சி.எஸ்.கே அணி செய்த தவறை – சுட்டிக்காட்டிய ரெய்னா

“அல்லது ஜஹீர் கான் முடிவா? இது யாருடைய முடிவு? ஏனெனில் அதனால் பண்ட் மிகவும் விரக்தியாக உள்ளார். அதே சமயம் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் ஒரு கேப்டனாக நீங்கள் இதை நேர்மறையான வழியில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த கோபம் அல்லது விரக்தியை கேப்டன் நல்ல செயல்பாடுகளாக வெளிப்படுத்திக் காட்ட வேண்டும். அதை விட்டுவிட்டு இப்படி வாதிடக்கூடாது” என்று கூறினார்.

- Advertisement -