புதிய பயிற்சியாளர் விடயத்தில் கங்குலி எடுத்துள்ள முக்கிய முடிவு – விராட் கோலிக்கு மீண்டும் சிக்கல்

Ganguly
- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ரவிசாஸ்திரி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளாக இந்திய அணிக்காக பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். 2019ஆம் ஆண்டு அவருடைய பயிற்சியாளர் பதவி ஒப்பந்த காலம் முடிவடைந்த போது அணியின் கேப்டன் விராட் கோலியின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் அவர் பயிற்சியாளர் பதவியில் தொடர்ந்தார்.

Shastri

- Advertisement -

இந்நிலையில் தற்போது எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் தான் பயிற்சியாளராக தொடர விரும்பவில்லை என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளதால் நிச்சயம் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தீவிரமாக புதிய பயிற்சியாளரை தேர்வு செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது பிசிசிஐயின் தலைவர் கங்குலி மீண்டும் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவை நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே 2016 17 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தபோது விராட் கோலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஓராண்டிற்குள் அனில் கும்ப்ளே தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

Kumble 1

இந்நிலையில் தற்போது மீண்டும் இந்திய அணிக்கு கும்ப்ளேவை பயிற்சியாளராக நியமித்தால் அவருக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இடையே உள்ள உறவு எப்படி சுமுகமாக செல்லும் என்றும் இதனால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் கேப்டன்ஷிப் மாற்றம் ஏற்படும் என்றும் தெரிகிறது. ஏற்கனவே கோலிக்கும், கும்ப்ளேவுக்கும் ஒத்துப்போகாத நிலையில் கும்ப்ளே தான் பயிற்சியாளராக இருக்கவேண்டும் என்று கங்குலி தற்போது உறுதியாக உள்ளார்.

இதனால் நிச்சயம் விராட் கோலி சில சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் அதிலிருந்து அவர் இவ்வாறு அணியை கொண்டு செல்லப் போகிறார் என்பதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement