3வது இடத்தில் டிராவிட், புஜாரா மாதிரி வரணும்ன்னா.. அதை செய்ங்க.. தடுமாறும் கில்லுக்கு கும்ப்ளே ஆலோசனை

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்கி நடைபெற்ற வரும் அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து விளையாடி வரும் இந்தியா 2வது நாள் முடிவில் 421/7 ரன்கள் குவித்து இங்கிலாந்தை விட 175 ரன்கள் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. இந்தியாவுக்கு இதுவரை அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 80, கே.எல் ராகுல் 86, ரவீந்திர ஜடேஜா 81* ரன்கள் அடித்து வெற்றிக்கான அடித்தளத்தை வலுவாக அமைத்துக் கொடுத்துள்ளனர்.

- Advertisement -

டிராவிட், புஜாரா மாதிரி:
முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீப காலங்களாகவே தடுமாறி வரும் இளம் வீரர் சுப்மன் கில் இதுவரை 20 போட்டிகளில் 1040 ரன்களை 30.59 என்ற சராசரியில் எடுத்து தடுமாறி வருகிறார். போதாக்குறைக்கு துவக்க வீரராக விளையாடி வந்த அவர் ஜெயஸ்வால் வந்ததும் 3வது இடத்தில் விளையாடி வருகிறார். ஆனால் தற்போது முன்பை விட அவர் மோசமாக தடுமாறி வருவதால் அணியிலிருந்து நீக்குமாறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பவுண்டரிகள் அடிப்பதை விட ஸ்ட்ரைக்கை மாற்றி மாற்றி சிங்கிள் எடுத்து எதிரணி மீது அழுத்தத்தை போட்டால் மட்டுமே ராகுல் டிராவிட், புஜாரா போல 3வது இடத்தில் வெற்றிகரமாக செயல்பட முடியும் என்று சுப்மன் கில்லுக்கு ஜாம்பவான் அனில் கும்ப்ளே ஆலோசனை கூறியுள்ளார். இது பற்றி ஸ்போர்ட்ஸ்18 தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் ஸ்ட்ரைக்கை மாற்றவில்லை என்றால் தொடர்ந்து அழுத்தம் வளர்ந்து கொண்டே இருக்கும்”

- Advertisement -

“எனவே அதை அவர் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய இந்திய மைதானங்களில் அவர் 3வது இடத்தில் வெற்றிகரமாக செயல்பட விரும்பினால் ஸ்ட்ரைக்கை தொடர்ந்து மாற்ற வேண்டும். இந்த போட்டியில் கூட அவர் தன்னுடைய விக்கெட்டை இழந்து விடக்கூடாது என்பதற்காக மட்டுமே நேரம் எடுத்து விளையாடினார்”

இதையும் படிங்க: முதல் நாளிலேயே அவரை யூஸ் பண்ணாம.. இங்கிலாந்து ட்ரிக்கை மிஸ் பண்ணிட்டாங்க.. அனில் கும்ப்ளே அதிருப்தி

“எனவே நீங்கள் 3வது இடத்தில் புஜாரா அல்லது டிராவிட் போல அசத்த வேண்டுமெனில் ஸ்ட்ரைக்கை மாற்ற வேண்டும். சுழல் பந்துகளுக்கு எதிராக அவர் மெதுவான கைகளுடன் மணிக்கட்டை பயன்படுத்தி விளையாட வேண்டும். இது அவர் தன்னுடைய பேட்டிங்கில் சேர்க்க வேண்டிய ஒரு அம்சமாகும்” என்று கூறினார். முன்னதாக புஜாராவை கழற்றி விட்டு வருங்காலத்தை கருத்தில் கொண்டு சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த இடத்தில் அவர் தடுமாறி வருவது ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement