இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக வெற்றிகரமான கேப்டனாக போற்றப்பட்டு வருகிறார். ஏனெனில் டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி-யின் அனைத்து வகையான கோப்பையையும் பெற்றுக் கொடுத்த ஒரே கேப்டனாக தோனி இருப்பதினாலும் அவரது தலைமையின் கீழ் இந்திய அணி மகத்தான பல வெற்றிகளை பெற்றிருப்பதாலும் அவர் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் போற்றப்படும் ஒரு கேப்டனாக இருந்து வருகிறார்.
தோனி முடிவு எடுப்பதில் கில்லாடி :
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் அவரது புகழ் இன்னும் குறையவில்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தோனி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளார். ஆண்டுக்கு ஆண்டு அவர் குறித்த பாராட்டுகள் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றன.
தற்போது ஐபிஎல் தொடர்களில் விளையாடி வரும் அவர் 43 வயதை தொட்ட போதிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக அவரை முன்மாதிரியாக கொண்டு இளம் வீரர்கள் பலரும் தோனியை வாழ்த்தி பேசி வருகின்றனர்.
விக்கெட் கீப்பிங், ஸ்டம்பிங், ரன் அவுட் மற்றும் கேட்ச் என கீப்பராக அசத்தும் அவர் பேட்ஸ்மேனாகவும் பினிஷிங் செய்து போட்டியை முடிக்கும் வல்லமை படைத்தவர். அதோடு போட்டியின் முக்கிய நேரங்களில் அம்பயர்கள் வழங்கும் தவறான முடிவுகளை எதிர்த்து டி.ஆர்.எஸ் எடுப்பதிலும் தோனி வல்லவர்.
இந்நிலையில் அவரது அந்த திறமை குறித்து பேசியுள்ள பிரபல அம்பயர் அணில் சவுத்ரி அவரை பாராட்டி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தோனி ரசிகர்கள் கூறுவது போலவே உண்மையிலேயே துல்லியமான முடிவுகளை எடுக்கக் கூடியவர். அவர் எடுக்கும் டி.ஆர்.எஸ் அழைப்புகள் அனைத்தும் கிட்டத்தட்ட மிகத் துல்லியமாக இருக்கும்.
இதையும் படிங்க : ரோஹித் சர்மாவும், பாண்டியாவும் சண்டையை விட்டுட்டு ஒன்னா விளையாட டிராவிட் தான் காரணம் – என்ன நடந்தது தெரியுமா?
பேட்ஸ்மேன்களுக்கு பின்னால் இருப்பதால் விக்கெட் கீப்பர்களால் சில நேரங்களில் பவுலர்களின் பொசிஷனை சரியாக பார்க்க முடியாது. ஆனால் தோனியின் அழைப்புகள் எல்லாம் வித்தியாசமானது. அவர் எடுக்கும் முடிவுகள் மிகச் சரியாக இருக்கும். பவுலர்களையும் பேட்ஸ்மேன்களையும் அவர் சரியாக உற்று நோக்குவதாலேயே அவரால் முடிவுகளை சரியாக எடுக்க முடிகிறது என அணில் சவுத்ரி கூறியது குறிப்பிடத்தக்கது.