ரோஹித் சர்மாவும், பாண்டியாவும் சண்டையை விட்டுட்டு ஒன்னா விளையாட டிராவிட் தான் காரணம் – என்ன நடந்தது தெரியுமா?

Dravid
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியாவை மிகப்பெரிய தொகைக்கு டிரேடிங் செய்து அவரை கேப்டனாக நியமித்தது. இப்படி ஹார்டிக் பாண்டியா திடீரென கேப்டன் பதவியை பெற்றதனால் சாம்பியன் கேப்டனான ரோகித் சர்மாவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் துரோகம் இழைத்து விட்டதாக அந்த அணியின் ரசிகர்கள் மும்பை அணியை பின் தொடர்வதை கைவிட்டனர்.

சமாதானம் செய்து வைத்த டிராவிட் :

மேலும் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது அந்த அணி வீரர்களுக்கு இடையேயும் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஏமாற்றத்தில் இருந்து ரோஹித் சர்மா எப்படியோ ஒரு வழியாக இந்த சீசனில் விளையாடி முடித்து விட்டார். ஆனால் இந்த சீசனில் விளையாடிய மும்பை அணியானது நட்சத்திர வீரர்களைக் கொண்டிருந்தாலும் கடைசி இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றிக்கு முன்னேற முடியாமல் வெளியேறி இருந்தது.

- Advertisement -

மும்பை அணியில் பாண்டியா ரோகித் சர்மாவை அவமரியாதையாக நடத்தியதால் களத்திலேயே பலமுறை ரோகித் சர்மா ஏமாற்றத்தை சந்தித்ததையும் காணமுடிந்தது. இதன் காரணமாக பாண்டியா மற்றும் ரோகித் சர்மா இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் டி20 உலக கோப்பை தொடரின் போது ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டு அவரது தலைமையில் இந்திய அணி வெற்றியும் பெற்று இருந்தது. இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரின் போது ஆரம்ப கட்ட பயிற்சி நாட்களில் ரோகித் சர்மா பாண்டியாவுடன் பேசவில்லை என்றும் பின்னர் டிராவிட் சமாதானம் செய்து வைத்ததாலேயே ரோகித் சர்மா பாண்டியாவிடம் பேசினார் என்று பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : டி20 உலக கோப்பையை தொடரை கவர் செய்வதற்காக நான் அங்கு சென்று இருந்தேன். அப்போது முதல் நாள் பயிற்சியில் ரோகித் சர்மாவும் பாண்டியாவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் இரண்டாம் நாள் இருவருமே பேசிக் கொண்டனர். அதுமட்டும் இன்றி நீண்ட நேரம் அமர்ந்து ஒன்றாக ஆலோசனை நடத்தினர். அது மட்டுமின்றி பாண்டியா பேட்டிங் பயிற்சி செய்யும்போது ரோஹித் சர்மா சில மாற்றங்களையும் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : அறிமுகப் போட்டியிலேயே வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர்.. வாய்ப்புக்காக ஏங்கியே 31 வயதில் ஓய்வு

இப்படி ஒரு நாளில் பேசாமல் இருந்த அவர்களை அடுத்த நாளே டிராவிட் சமாதானம் செய்து பேச வைத்தார். இரண்டு வீரர்களையும் எப்படி கையாள வேண்டும் என்பது டிராவிடுக்கு நன்றாக தெரியும் என்றும் அவர்தான் அவர்களை சேர்த்து வைத்தார் என்றும் அந்த பத்திரிகையாளர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement