அறிமுகப் போட்டியிலேயே வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர்.. வாய்ப்புக்காக ஏங்கியே 31 வயதில் ஓய்வு

Barinder Sran Test
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் பரிந்தர் ஸ்ரண் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த அவர் முதலில் தம்முடைய கேரியரை குத்துச்சண்டை வீரராக துவங்கினார். 2008 ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற விஜேந்தர் சிங் அகடமியில் அவர் குத்துச்சண்டை பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஐபிஎல் தொடரில் திறமையான இளம் வீரர்கள் வரவேற்கப்படுவதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெளியிட்ட விளம்பரம் அவரை ஈர்த்தது. அதைப் பார்த்து கிரிக்கெட்டில் இடது கை வேகப்பந்து வீச்சாளராக விளையாடத் துவங்கிய அவர் 2015 ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ராஜஸ்தான் அணிக்காக வாங்கப்பட்டார். அந்த வாய்ப்பிலும் உள்ளூர் கிரிக்கெட்டிலும் ஓரளவு அசத்தியதால் 2016ஆம் ஆண்டு அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

31 வயதில் ஓய்வு:

குறிப்பாக ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் எம்எஸ் தோனியின் கைகளால் அவர் அறிமுகத் தொப்பியை வாங்கி இந்தியாவுக்காக அறிமுகமானார். அப்போட்டியில் 56 ரன்கள் கொடுத்த அவர் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அப்படியே ஐபிஎல் தொடரிலும் அசத்தியதால் 2016ஆம் ஆண்டு மீண்டும் அவர் ஜிம்பாப்பே டி20 தொடரில் தேர்வு செய்யப்பட்டார்.

அந்தத் தொடரில் அறிமுகமான அவர் முதல் போட்டியிலேயே 10 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியிலேயே சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய வீரராக பரிந்தர் ஸ்ரண் படைத்த சாதனை இன்றும் உடைக்கப்படவில்லை. அந்த வகையில் 2016 ஜூன் மாதம் வரை இந்தியாவுக்காக அவர் 6 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடினார்.

- Advertisement -

ஜொலிக்காத கேரியர்:

ஆனால் அதே 2016இல் அறிமுகமான ஜஸ்ப்ரித் பும்ரா அவரை விட மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதனால் இவரை கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் கழற்றி விட்டது. அதன் பின் ஐபிஎல் தொடரிலும் பரிந்தர் ஸ்ரண் பெரிய செயல்பாடுகளை வெளிப்படுத்தாததால் இந்திய அணியை விட்டு நீண்ட தூரம் சென்று விட்டார்.

இதையும் படிங்க: அவரைப் பற்றி நிறைய பேசுனாங்க.. இதுக்காகவே தோனி ஐபிஎல் 2025 தொடரில் விளையாடனும்.. ரெய்னா பேட்டி

இருப்பினும் இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுப்பதற்காக முடிந்தளவுக்கு போராடிய அவர் 2021 வரை உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினார். ஆனால் அப்போதும் வாய்ப்பு கிடைக்காததால் உள்ளூர் கிரிக்கெட்டிலும் விலகிய அவர் தற்போது 31 வயதில் ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். இந்த சமயத்தில் தமக்கு ஆதரவளித்த அணி நிர்வாகங்கள், பயிற்சியாளர்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பரிந்தர் ஸ்ரண் கிரிக்கெட்டிலிருந்து மொத்தமாக பிரியமானதுடன் விடை பெற்றுள்ளார்.

Advertisement