உலகில் யாருமே நம்மை ஜெயிக்க முடியாது என்ற திமிரே ஃபைனலில் தோற்க காரணம் – இந்தியாவை விளாசிய வெ.இ ஜாம்பவான்

- Advertisement -

இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை மாபெரும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை சந்தித்த இந்தியா கையுடன் நாடு திரும்பியது. இத்தனைக்கும் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் டாஸ் அதிர்ஷ்டம் கிடைக்கும் அதை சரியாக பயன்படுத்தாத இந்தியா ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் 5 பேர் இடது கை வீரர்களாக இருந்தும் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வினை கழற்றி விட்டு தவறான அணியை தேர்வு செய்தது தோல்வியை கொடுத்தது.

அத்துடன் ஐபிஎல் தொடரில் விளையாடி ஒரு நாளில் வெறும் 4 ஓவர்கள் மட்டும் வீசிய இந்திய பவுலர்கள் முழுமையாக தயாராகாமல் நேரடியாக ஃபைனலில் களமிறங்கி சோர்வுடன் ஒரே நாளில் 17 ஓவர்கள் வரை வீசி முதல் இன்னிங்சில் 469 ரன்கள் வாரி வழங்கியது தோல்விக்கு காரணமானது. அத்துடன் ரகானே, ஜடேஜா, தாக்கூர் ஆகியோரை தவிர்த்து நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக போற்றப்படும் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோர் அரை சதம் கூட அடிக்காமல் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது மெகா தோல்வியை பரிசளித்தது.

- Advertisement -

ஓவர் கான்ஃபிடன்ஸ்:
அந்த நிலையில் நாடு திரும்பிய இந்திய அணியினர் ஒரு மாதம் ஓய்வெடுத்து அடுத்ததாக ஜூலை மாதம் துவங்கும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் விளையாட உள்ளனர். ஆரம்ப காலங்களில் மிரட்டிய அந்த அணி தற்போது பலவீனமாக இருப்பதால் அடித்து நொறுக்கி 2 – 0 என்ற வைட்வாஷ் வெற்றியும் சாதனைகளையும் படைத்து வாருங்கள் என்று இந்தியாவை சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் தோற்க்கிறோம் என்று தெரிந்தும் அதற்கு மரியாதை கொடுத்து தயாராகாமல் ஐபிஎல் தொடரில் விளையாடிய இந்தியா தங்களை உலகில் சாய்ப்பதற்கு வேறு எந்த அணியும் இல்லை என்ற திமிருடன் களமிறங்கியதே தோல்வியை கொடுத்ததாக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரர் ஆண்டி ராபர்ட்ஸ் விமர்சித்துள்ளார். மேலும் நட்சத்திர வீரர்களுடன் களமிறங்குவதால் நிச்சயம் வெல்வோம் என்று அதீத தன்னம்பிக்கையுடன் விளையாடி இந்தியா தோற்றதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி மிட் டே பத்திரிகையில் கூறியது பின்வருமாறு.

- Advertisement -

“ஒரு வகையான ஆணவம் இந்திய கிரிக்கெட்டில் புகுந்துள்ளது. அதன் காரணமாக உலக நாடுகள் தங்களை எதுவும் செய்ய முடியாது என்று இந்தியா குறைத்து மதிப்பிட்டுள்ளது. என்னைக் கேட்டால் டெஸ்ட் போட்டிங்களா அல்லது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டா என்று இந்தியா முடிவெடுக்க வேண்டும். டி20 போட்டிகள் அதன் போக்கில் தாமாகவே இயங்கும். இருப்பினும் அதில் பேட் மற்றும் பந்துகிடையே சரியான போட்டியில்லை”

“அந்த ஃபைனலில் இந்தியா தங்களுடைய பலமான பேட்டிங்கை காட்டும் என்று எதிர்பார்த்தேன். இருப்பினும் ரகானே மட்டுமே கடினமாக போராடி தனது திறமையை காண்பித்தார். மேலும் சுப்மன் கில் பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் அடிக்கடி அவுட்டாகக்கூடிய லெக் ஸ்டம்ப் லைனில் நின்று பேட்டிங் செய்தார். அவர் நன்றாக விளையாடினாலும் பந்துக்கு பின்னே வந்து பேட்டிங் செய்ய வேண்டும். விராட் கோலியும் முதல் இன்னிங்ஸில் எதிர்கொள்ள முடியாத அற்புதமான மிட்சேல் ஸ்டார்க் பந்தில் அவுட்டானார்”

- Advertisement -

“மொத்தத்தில் நீங்கள் பார்க்கும் போது இந்தியாவிடம் நல்ல வீரர்கள் இருப்பதாக தோன்றும். ஆனால் அவர்கள் வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக செயல்படுவதில்லை. அதன் காரணமாக சரித்திரத்தில் எட்டப்படாத இலக்கை (444) அவர்கள் தொடுவார்கள்என்று நான் நம்பவில்லை. குறிப்பாக கடைசி நாளில் பேட்டிங் சரிவு ஏற்படும் என்று எனக்கு தெரியும் ஏனெனில் அவர்கள் 2 இன்னிங்சிலும் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க:இந்தியாவுக்குன்னா கசக்குறேன், இதுக்கு மட்டும் நான் இன்னிக்கிறனே? தேர்வுக்குழு சஹா தக்க பதிலடி – நடந்தது என்ன?

அவர் கூறுவது போல இந்தியா ஐபிஎல் தொடருக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை ஐசிசி தொடருக்கு கொடுப்பதில்லை. அதே போல நட்சத்திர பேட்ஸ்மேன்களும் ஆசிய கண்டத்தில் புலியாகவும் வெளிநாட்டு மண்ணில் பெட்டி பாம்பாகவும் அடங்குவது தொடர்கதையாகி வருகிறது.

Advertisement