வதந்திகளை நம்ப வேண்டாம்.. அவர் நல்லா இருக்காரு.. விராட் கோலி குறித்த முக்கிய அப்டேட்டை கொடுத்த – ஆர்.சி.பி கோச்

Andy Flower
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இரண்டாவது வாரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று பலமான அணியாக திகழ்ந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது நேற்று தங்களது சொந்த மண்ணான சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் முதல் தோல்வியை சந்தித்திருந்தது.

விராட் கோலி காயம் குறித்த முக்கிய அப்டேட்டை வழங்கிய ஆன்டி பிளவர் :

அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை குவிக்க பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 170 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது பெங்களூரு அணி சார்பாக விளையாடியிருந்த நட்சத்திர விராட் கோலி பீல்டிங் செய்கையில் காயமடைந்தார். அதாவது போட்டியின் 12-வது ஓவரில் விராட் கோலி பவுண்டரி லைனில் பந்தினை தடுக்க முயன்ற போது பந்து அவரது விரலில் பட்டு காயத்தை ஏற்படுத்தியது. பந்து பட்டதும் வலியால் துடித்த அவருக்கு உடனடியாக பிசியோதெரபிஸ்ட் உதவியுடன் முதலுதவி வழங்கப்பட்டது.

ஆனாலும் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிறிது நேரம் அவர் வலியாலும் துடித்திருந்தார். இதன் காரணமாக எதிர்வரும் சில ஆட்டங்களை அவர் தவறவிட வாய்ப்பிருப்பதாகவும் வதந்திகள் பரவின. ஆனாலும் விராட் கோலியின் காயம் குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை.

- Advertisement -

இந்நிலையில் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளரான ஆன்டி பிளவர் விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்த ஒரு முக்கிய அப்டேட் ஒன்றினை கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி தற்போது நலமுடன் உள்ளார். அவருக்கு பெரியளவில் எந்த காயமும் ஏற்படவில்லை. அவர் தற்போது மிகச் சிறப்பாக முழு உடற்தகுதியுடன் உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் போட்டிகளில் தல தோனியை பின்னுக்கு தள்ளி புதிய சாதனையை நிகழ்த்திய ஷ்ரேயாஸ் ஐயர் – விவரம் இதோ

இதன் காரணமாக விராட் கோலி எந்த போட்டிகளையும் தவறவிட மாட்டார் என்றும் எதிர்வரும் அனைத்து போட்டிகளிலும் அவர் நிச்சயம் இடம்பிடித்து விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது. அவரது இந்த பேட்டி வெளியாகி கோலியின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement