ஐ.பி.எல் போட்டிகளில் தல தோனியை பின்னுக்கு தள்ளி புதிய சாதனையை நிகழ்த்திய ஷ்ரேயாஸ் ஐயர் – விவரம் இதோ

Shreyas and Dhoni
- Advertisement -

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. அதன்மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் மூன்றாவது முறையாக அந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருந்தது. ஆனாலும் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர் சாம்பியன் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயரை அந்த அணியின் நிர்வாகம் தங்களது அணியில் இருந்து கழட்டி விட்டது.

தல தோனியை பின்னுக்கு தள்ளி ஷ்ரேயாஸ் ஐயர் அசத்தல் சாதனை :

அதன் காரணமாக மெகா ஏலத்தில் கலந்து கொண்ட ஷ்ரேயாஸ் ஐயருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த 2025 மெகா ஏலத்தில் 26 கோடியே 75 லட்சம் ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் அந்த அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

ஏற்கனவே கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற அவரது கேப்டன்சிக்கு கீழ் தற்போது பஞ்சாப் அணியும் இந்த சீசனை மிகச் சிறப்பாக துவங்கியுள்ளது. அந்த வகையில் இந்த 2025 சீசனில் பஞ்சாப் அணி இதுவரை தாங்கள் விளையாடிய முதல் இரண்டு போட்டியிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டு வெற்றிகளை பெற்று இந்த தொடரில் பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ளது.

கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் வாழிகாட்டுதலின் கீழ் அந்த அணி தற்போது வலிமையுள்ள அணியாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் பஞ்சாப் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள அவர் முதல் 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளதால் முன்னாள் சி.எஸ்.கே கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஒரு முக்கிய சாதனையையும் தகர்த்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் ஷ்ரேயாஸ் ஐயர் படைத்த சாதனை யாதெனில் : கடந்தாண்டு இறுதியில் கொல்கத்தா அணிக்காக தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்ற அவர் தற்போது இந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற தோனியின் சாதனை முறியடித்துள்ளார்.

இதையும் படிங்க : விராட் கோலிக்கு பந்துவீசும் முன் கண்ணீர் விட்ட முகமது சிராஜ்.. அரங்கேறிய எமோஷனல் மொமென்ட் – என்ன நடந்தது?

இதற்கு முன்னதாக தோனி கேப்டனாக தொடர்ச்சியாக 7 வெற்றிகளை பெற்று இரண்டாம் இடத்தில் இருந்த வேளையில் தற்போது 8 வெற்றிகளுடன் அவரை பின்னுக்கு தள்ளி ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் கௌதம் கம்பீர் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றி பெற்ற கேப்டனாக முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement