240 ஸ்ட்ரைக் ரேட்.. கடைசி போட்டியில் ஸ்கீரினை கிழித்த ரசல்.. 2 கெளரவத்துடன் பிரியா மனதுடன் ஓய்வு

Andrew Russell
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. 2வது போட்டி ஜமைக்காவில் ஜூலை 23ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அந்தப் போட்டியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் 37 வயதாகும் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார். எனவே போட்டி துவங்குவதற்கு முன்பாக அவருக்கு ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் இருபுறமும் நின்று கைதட்டி வரவேற்பளித்து கௌரவித்தனர். அத்துடன் தனது சொந்த ஊரான ஜமைக்காவில் சொந்த ரசிகர்கள் கொடுத்த பாராட்டையும் ஏற்றுக்கொண்ட ரசல் கடைசி முறையாக நெகிழ்ச்சியுடன் களத்தில் களமிறங்கினார்.

- Advertisement -

விடை பெற்ற ரசல்:

2012, 2016 ஐசிசி டி20 உலகக் கோப்பைகளை வெஸ்ட் இண்டீஸ் வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவருக்கு ஜமைக்கா விளையாட்டுத்துறை அமைச்சர் சிறப்பு நினைவுப் பரிசை வழங்கி கௌரவித்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரெண்டன் கிங் அதிரடியாக விளையாடி 51 (36) ரன்னில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் தடுமாறிய கேப்டன் சாய் ஹோப் 9 (13) ரன்னில் அவுட்டாகி பின்னடைவை உண்டாக்கினார்.

மிடில் ஆர்டரில் ஹெட்மயர் 14, ரோஸ்டன் சேஸ் 16, ரோவ்மன் போவெல் 12 ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினர். அப்போது லோயர் ஆர்டரில் களமிறங்கிய ரசல் தம்முடைய ஸ்டைலில் அதிரடியாக 2 பவுண்டரி 4 சிக்சரை பறக்க விட்டு 36 (15) ரன்களை 240 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து அசத்தினார். குறிப்பாக பென் ட்வார்சுய்ஸ் வீசிய ஒரு பந்தில் ரசல் நேராக முரட்டுத்தனமாக அடித்த சிக்ஸர் சைட்ஸ்கீரினை கிழித்து ஓட்டை போட்டு உள்ளே விழுந்தது.

- Advertisement -

ஆஸ்திரேலியா வெற்றி:

அதை மைதானப் பராமரிப்பாளர்களுடன் சேர்ந்து தேடிய டிம் டேவிட் சில நிமிடங்கள் கழித்து பந்தை எடுத்தார். அந்தளவுக்கு அதிரடியாக விளையாடிய ரசல் அவுட்டான போது எழுந்து நின்று கைதட்டிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டுக்கு மத்தியில் பிரியா மனதுடன் விடை பெற்றார். இறுதியில் குடகேஷ் மோட்டி 18* (9) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 172/8 ரன்கள் குவித்தது.

இதையும் படிங்க: என்னை திட்டுறாவாங்க.. அந்த 90 நொடி நேர்மையான்னு சொல்லுங்க.. இங்கிலாந்தின் நாடகத்தை விளாசிய கில்

ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 3, மேக்ஸ்வெல் 2, நாதன் எலிஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடி ஆஸ்திரேலியா மிகவும் அதிரடியாக விளையாடி பேட்டிங் செய்து 15.2 ஓவரிலேயே 173/2 ரன்களை எடுத்து 8 வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அந்த அணிக்கு மேக்ஸ்வெல் 12, கேப்டன் மார்ஷ் 21 ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் ஜோஸ் இங்கிலீஷ் அதிரடியாக 78* (33), கேமரூன் கிரீன் 56* (32) ரன்கள் எடுத்து 2 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற உதவினர்.

Advertisement