Andre Russell : நான் எனது அறையைவிட்டு வெளியே வருவதில்லை. மனக்கஷ்டத்துடன் சோர்வாக உள்ளேன் – ரசல் பேட்டி

இந்த வருட ஆரம்பத்தில் கொல்கத்தா அணி அனைத்து அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. இந்த வருடம் தொடரை கைப்பற்றும் அணியும் கொல்கத்தா அணிதான் என்று ரசிகர்கள் கூறிவந்தனர்

Russell-1
- Advertisement -

இந்த வருட ஆரம்பத்தில் கொல்கத்தா அணி அனைத்து அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. இந்த வருடம் தொடரை கைப்பற்றும் அணியும் கொல்கத்தா அணிதான் என்று ரசிகர்கள் கூறிவந்தனர். இந்நிலையில் கொல்கத்தா அணி கடைசியாக பங்கேற்ற 6 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது.

Karthik

- Advertisement -

இந்த மோசமான தோல்விக்கு காரணத்தினை தற்போது அந்த அணியின் அதிரடி வீரரான ரசல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது : எங்களது அணி சிறப்பான அணிதான். ஆனால், வீரர்களின் தேர்வு சரியாக நடக்காததால் எங்கள் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. மற்ற அணிகளில் பொதுவாக பேட்டிங் குறைபாடு இருக்கும். ஆனால், எங்களது அணியில் சரியான பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து இருந்தால் பல போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்று இருப்போம்.

அதுபோன்று பீல்டிங் மிக மோசமாக உள்ளது. நிறைய கேட்ச்கள் மற்றும் ரன்களை எங்களது வீரர்கள் கோட்டை விடுகின்றனர். தொடர் தோல்விகளால் எங்களது அணி வீரர்கள் மிகுந்த சோர்வுடன் உள்ளனர். ஓய்வறையிலும் சுமூகமான சூழல் இல்லை இதனால் நான் மிகுந்த மனக்கஷ்டத்துடன் உள்ளேன் மேலும் நான் எனது அறையை விட்டு வெளியே வருவதில்லை. இதற்கு மருந்து எங்கள் அணிக்கு வெற்றி தேவை என்று ரசல் கூறினார்.

Gill

கொல்கத்தா அணி வீரர்களின் நிலை குறித்து இப்படி ரசல் ஓப்பனாக நிலையில் இன்று கொல்கத்தா அணி மும்பை அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை மோதியுள்ளது. இதில் மும்பை அணி 18 முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement