ஐபிஎல் பணத்தை தியாகம் செய்து வெ.இ அணிக்காக உலக கோப்பையில் விளையாட தயார் – நட்சத்திர வீரர் அறிவிப்பு

Andre Russell Wi
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டியில் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. ஒரு காலத்தில் உலகையே மிரட்டிய அணியாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் தற்போது சொந்த மண்ணில் கூட படுதோல்வியை சந்திக்கும் கத்துக்குட்டியாக மாறியுள்ளது கிரிக்கெட்டை உண்மையாக விரும்பும் அனைத்து ரசிகர்களையும் சோகமடைய வைக்கிறது என்றே சொல்லலாம். குறிப்பாக 1950 காலகட்டங்களிலேயே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளை துவம்சம் செய்யும் அளவுக்கு தரமாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் க்ளைவ் லாய்ட், ரிச்சர்ட்ஸ், மால்கோம் மார்ஷல், ஆண்டி ராபர்ட்ஸ் போன்ற வீரர்களுடன் 1975, 1979 ஆகிய அடுத்தடுத்த உலகக் கோப்பைகளை வென்று கிரிக்கெட்டின் அசுரனாக திகழ்ந்தது.

IND vs WI T20I

- Advertisement -

இருப்பினும் பிரைன் லாரா தலைமுறைக்குப் பின் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாததால் 21ஆம் நூற்றாண்டில் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கத்துக்குட்டியாக மாறியுள்ள வெஸ்ட் இண்டீஸ் வரலாற்றில் முதல் முறையாக 2023 உலகக் கோப்பை தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் வெஸ்ட் வாரியம் பொருளாதார நெருக்கடியில் சிக்கி அடுத்த தலைமுறை வீரர்களுக்கு நவீன வசதிகளை செய்து கொடுக்க முடியாத அளவுக்கு தள்ளப்பட்டுள்ளது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தாய் மண்ணுக்காக தயார்:
அது போக ஏற்கனவே உள்ள ஆண்ட்ரே ரசல், சுனில் நரேன் போன்ற வீரர்களுக்கு போதிய சம்பளம் கொடுக்க முடியாத அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் வாரியம் தடுமாறி வருகிறது. அதனாலேயே அந்த நட்சத்திர வீரர்கள் ஐபிஎல் போன்ற டி20 தொடரில் கிடைக்கும் பணத்திற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் சரிந்து கிடைக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 2024 டி20 உலக கோப்பையில் விளையாடுவதற்கு ஐபிஎல் போன்ற எவ்விதமான டி20 தொடர்களையும் தியாகம் செய்ய தயார் என்று நட்சத்திர அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல் அறிவித்துள்ளார்.

Russell Umesh Yadhav

தற்போது அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் தொடரில் விளையாடி வரும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நான் தயாராக இருக்கிறேன். குறிப்பாக அடுத்த உலக கோப்பையில் என்னால் நமது அணிக்கு ஏதேனும் ஸ்பெஷல் அம்சத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். அதற்கு முன்பாகவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஒரு சில தொடர்களில் விளையாடுவதற்கும் நான் தயாராக இருக்கிறேன். அதாவது நேரடியாக நான் உலகக்கோப்பையில் தான் விளையாடுவேன் என்று சொல்ல விரும்பவில்லை”

- Advertisement -

“ஏனெனில் அது எவ்வாறு வேலை செய்யும் என்பது எனக்கு தெரியும். அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவதற்கு சில டி20 லீக் தொடர்களில் பங்கேற்பதை நான் தியாகம் செய்ய வேண்டும் என்பதையும் அறிவேன். எனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக உலக கோப்பையில் என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அனைத்து பங்கையும் ஆற்றுவதற்கு விரும்புகிறேன். ஆனால் அடுத்ததாக இந்தியாவுக்கு எதிராக ஒரு டி20 தொடர் நடைபெற உள்ளது. இருப்பினும் அதில் விளையாடுவதற்காக என்னிடம் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் யாரும் எதுவும் சொல்லவில்லை”

Russell

“எனவே தற்போது வேறு தொடரில் விளையாடி வரும் நான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட எப்போதும் தயாராகவும் கடினமான பயிற்சிகளையும் எடுத்து வருகிறேன்” என்று கூறினார். முன்னதாக ப்ராவோ, கிறிஸ் கெயில் போன்ற 2012, 2016 டி20 உலக கோப்பைகளை வென்ற தொடரில் இடம் பிடித்திருந்த நட்சத்திர வீரர்கள் வயது காரணமாக ஓய்வு பெற்ற நிலையில் சுனில் நரேன், ரசல் ஆகியோர் 2022 டி20 உலக கோப்பையில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க:சாதனை தான் தெரியும், ஆனா அதுக்கு பின்னாடி இருக்கும் அவரோட உழைப்பு உங்களுக்கு தெரியாது – நட்சத்திர வீரரை பாராட்டிய டிராவிட்

ஆனால் அவர்கள் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாடியதால் யாரிடமும் கையேந்த வேண்டும் என்ற அவசியமில்லை என வெளிப்படையாக அறிவித்த அப்போதைய பயிற்சியாளர் பில் சிமன்ஸ் அந்த இருவரையும் அணியில் சேர்க்கவில்லை. இருப்பினும் எதிர்பார்க்கப்பட்டது போலவே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் படுதோல்வியை சந்தித்து முதல் சுற்றுடன் வெளியேறியது. எனவே கடந்த உலக கோப்பையில் செய்த தவறை மீண்டும் செய்ய விரும்பாத ரசல் தற்போது தாமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விளையாட தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement