என் பவருக்கு 15க்கு 40 அடிப்பேன்.. எங்களுக்கு 4 ஃபைனல் தாண்டுனா தான் அது கிடைக்கும்.. ஆட்டநாயகன் ரசல்

Andre Russell
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 4ஆம் தேதி நடைபெற்ற 53வது போட்டியில் கொல்கத்தா வெறும் 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை சாய்த்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா தங்களது சொந்த மண்ணில் 207 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக குர்பாஸ் 35, கேப்டன் ரஹானே 30, ரகுவன்ஷி 44, ரசல் 57* (25), ரிங்கு சிங் 19* (6) ரன்களை எடுத்து அசத்தினார்கள்.

அடுத்த விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு சூர்யவன்சி 4, குணால் சிங் 0, துருவ் ஜுரேல் 0, ஹஸரங்கா 0 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். கூடவே ஜெய்ஸ்வால் 34 ரன்னில் அவுட்டானதால் 71/5 என ராஜஸ்தான் ஆரம்பத்திலேயே தடுமாறியது. அப்போது வெறித்தனமாக விளையாடிய ரியான் பராக் தொடர்ச்சியாக 5 சிக்சர்கள் பறக்க விட்டு 95 (45) ரன்கள் குவித்து போராடி அவுட்டானார்.

- Advertisement -

ஆட்டநாயகன் ரசல்:

அதே போல ஹெட்மயர் 29 (23) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். கடைசியில் சுபம் துபே 25* (14), ஜோப்ரா ஆர்ச்சர் 12 (8) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 205/8 ரன்களை மட்டுமே எடுத்த ராஜஸ்தான் போராடி 9வது தோல்வியை சந்தித்தது. மறுபுறம் திரில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் வைபை தக்க வைத்துக்கொண்ட கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக மொயின் அலி, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரசல் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இதையும் சேர்த்து பிளே ஆஃப் செல்ல அடுத்த 4 போட்டிகளையும் ஃபைனல் போல நினைத்துக்கொண்டு விளையாடி வெற்றி பெறத் துவங்கியுள்ளதாக ரசல் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தப் போட்டியின் முக்கியத்துவம் பற்றி எங்கள் அனைவருக்கும் தெரியும்”

- Advertisement -

15 பந்தில் 40 அடிப்பேன்:

“நாங்கள் தொடர்ச்சியாக 4 போட்டிகளை வெல்ல வேண்டும். அது 4 ஃபைனல்களைப் போன்றது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் எங்களுடைய செயல்பாடுகள் மற்றும் வெற்றியில் மகிழ்ச்சி. அதிரடி காட்ட எனக்கு கொஞ்சம் நேரம் தேவை. ஆரம்பத்தில் டாட் பந்துகளை எதிர்கொண்டதில் எனக்கு கவலையில்லை. பிட்ச் கடினமாக இருந்ததால் ஆரம்பத்திலேயே அதிரடி காட்டுவது கடினமாக இருந்தது”

இதையும் படிங்க: 1 ரன் தான்.. ஆனா இப்படி ஜெயிச்சது எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? – அஜின்க்யா ரஹானே மகிழ்ச்சி

“கடைசியில் பௌண்டரிகள் அடித்ததில் மகிழ்ச்சி. ரிங்குவும் கடைசியில் முக்கிய ரன்கள் அடித்தார். ஸ்கோர்போர்ட் தான் நல்ல அறிகுறி. அதை வைத்து நீங்கள் சூழ்நிலைகளையும், எந்த பவுலர்களை எதிர்கொள்ள போகிறீர்கள், யாரை டார்கெட் செய்ய வேண்டும் என்பதைக் கணக்கிடலாம். அந்த வகையில் ஸ்கோர்போர்ட்டை பார்த்த போது 5 ஓவர்கள் இருந்தது. அதை நான் 30 பந்துகளாக பார்த்தேன். அதில் 15 பந்துகளை எதிர்கொண்டால் என்னுடைய பவரை வைத்து 40 ரன்கள் அடிக்க முடியும்” என்று கூறினார்

Advertisement