1 ரன் தான்.. ஆனா இப்படி ஜெயிச்சது எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? – அஜின்க்யா ரஹானே மகிழ்ச்சி

Rahane
- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தங்களது சொந்த மைதானத்தில் இன்று மே 4-ஆம் தேதி நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53-வது போட்டியில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியை பெற்றது. இதன் மூலம் இந்த தொடரில் தங்களது ஐந்தாவது வெற்றியை பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது தங்களது பிளே ஆப் வாய்ப்பையும் உயிர்ப்புடன் வைத்துள்ளது.

ராஜஸ்தான் அணிக்கெதிரான வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது : அஜின்க்யா ரஹானே

அதே வேளையில் கொல்கத்தா அணியிடம் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 9 தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. அதன்படி நடைபெற்ற முடிந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்ததால் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி திரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது கொல்கத்தா அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த ஆண்ட்ரே ரசல் 25 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 57 ரன்கள் குவித்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய அந்த அணியின் கேப்டன் ரஹானே கூறுகையில் : உண்மையிலேயே இது ஒரு மிகவும் நெருக்கமான வெற்றியாக அமைந்ததில் மகிழ்ச்சி. 1 ரன் அல்லது 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்போது நிறைய திருப்தி கிடைக்கும்.

- Advertisement -

இந்த போட்டியில் குர்பாஸ் மற்றும் ரகுவன்ஷி ஆகியோர் மிகச் சிறப்பான அடித்தளம் அமைத்திருந்தனர். அதேபோன்று ரசல் மிகச் சிறப்பாக விளையாடி பெரிய ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றார். இந்த போட்டியில் பவர்பிளேவில் நாங்கள் அதிரடியாக விளையாடி 12-வது ஓவர் வரை அதை மெயின்டன் செய்ய நினைத்தோம். ஒரு புதிய பேட்ஸ்மேனாக அந்த மிடில் ஓவர்களில் வந்து பேட்டிங் செய்வது கஷ்டம்.

இதையும் படிங்க : கடைசி 2 ஓவரும் நான் நின்னு இருக்கனும்.. தப்பு என்மேல தான்.. கொல்கத்தா அணிக்கெதிரான தோல்விக்கு பின் – ரியான் பராக் பேட்டி

ஆனாலும் ரகுவன்ஷி மிகச் சிறப்பாக அதனை செய்தார். அதேபோன்று பீல்டிங்கிலும் 10 முதல் 12 ரன்கள் வரை நாங்கள் சேமித்திருந்தோம். இரண்டு சிறப்பான கேட்ச்கள், ஒரு ரன் அவுட் என இந்த போட்டியில் பீல்டிங் தான் எங்களுக்கு பெரிய வித்தியாசத்தினை ஏற்படுத்தி வெற்றி கொடுத்தது என ரகானே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement