கடைசி 2 ஓவரும் நான் நின்னு இருக்கனும்.. தப்பு என்மேல தான்.. கொல்கத்தா அணிக்கெதிரான தோல்விக்கு பின் – ரியான் பராக் பேட்டி

Riyan Parag
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53-வது லீக் போட்டியானது மே 4-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

நான் செய்ஞ்ச தப்பு தான் தோல்விக்கு காரணம் : ரியான் பராக்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக ஆண்ட்ரே ரசல் 57 ரன்களையும், ரகுவன்ஷி 44 ரன்களையும் குவித்தனர். பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

அதனை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது துவக்கத்திலிருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிவை சந்தித்திருந்தாலும் ரியான் பராக்கின் அட்டகாசமான ஆட்டம் காரணமாக இலக்கை நோக்கி அந்த அணி சிறப்பாக முன்னேறியது. ஆனாலும் இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்ததால் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி திரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் 45 பந்துகளில் 95 ரன்கள் அடித்த ரியான் பராக் ஆட்டமிழந்ததும் அந்த அணி தோல்வியை நோக்கி நகர்ந்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் கூறுகையில் : நான் கடைசி இரண்டு ஓவர்களிலும் நின்று போட்டியை முடிக்க வேண்டும் என்ற திட்டத்தை தான் வைத்திருந்தேன்.

- Advertisement -

ஆனால் 18-வது ஓவரில் நான் ஆட்டமிழந்தது என்னுடைய அணி தோல்வியை சந்தித்ததற்கு மிக முக்கியமான காரணமாக நினைக்கிறேன். கடைசி 6 ஓவர்களின் போது சரியான திட்டமிடல் வேண்டும் .அதற்கான வழிகளையும் நாங்கள் கண்டறிய வேண்டும் என்று நினைக்கிறேன். பந்துவீச்சிலும் கூடுதல் மாற்றங்கள் தேவைப்படுவதாக நினைக்கிறேன்.

இதையும் படிங்க : வெறும் 1 ரன்.. ஒரே ஓவரில் 6, 6, 6, 6, 6.. வெறித்தனமான போராடிய பராக் அரிய சாதனை.. ராஜஸ்தானை சாய்த்த கொல்கத்தா

எந்த ஒரு வீரரையும் நான் குற்றம் சொல்ல விரும்பவில்லை ஆனால் பல்வேறு விடயங்களில் முன்னேற்றத்தை காண வேண்டிய அவசியம் உள்ளது. இந்த போட்டியில் ரசல் ஆடிய இன்னிங்ஸ் கொல்கத்தா அணிக்கு முமென்ட்டத்தை கொடுத்தது. நாங்களும் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக தான் செயல்பட்டோம் ஆனால் இறுதியில் எங்கள் அணி தோல்வியை சந்தித்ததில் மிகவும் வருத்தம் என ரியான் பராக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement